பெண்கள் கண்டிப்பாக முருங்கை கீரை ஏன் சாப்பிட வேண்டும் என்பதற்கான முக்கிய காரணங்களை பார்க்கலாம்
By Muthu Vinayagam Kosalairaman Aug 13, 2024
Hindustan Times Tamil
வைட்டமின்கள், தாதுக்கள், ஆண்டிஆக்ஸிடன்ட்கள் என முருங்கை கீரையில் ஊட்டச்சத்துகள் மிகுந்து காணப்படுகிறது. இதில் இலைகளும், விதைகளும் பல்வேறு மருத்துவ பண்புகளை கொண்டுள்ளது
அதிசய மரம் என்று அழைக்கப்படும் முருங்கை கீரை, விதைகளில் இருந்து டேப்லட்கள் தயார் செய்யப்படுகின்றன. இவை எடை குறைப்பு, சரும பராமரிப்பு என பல்வேறு நன்மைகளை கொண்டதாக உள்ளது
முருங்கை இலையில் வைட்டமின் ஏ,சி,ஈ, கால்சியம், இரும்புசத்து நிறைந்து காணப்படுகிறது. இவை ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை பேனி காக்கிறது
ஹைட்ரோஸ்ட்ரிஜென் ஹர்மோன்களை சமநிலைப்படுத்தி பெண்கள் கருவுறுதல் வாய்ப்பை அதிகரிக்கிறது
இரும்பு சத்துக்கள சோர்பு, ரத்த சோகை போன்ற பாதிப்புகளை தடுத்து இயற்கையாக ஆற்றலை பெற உதவுகிறது
இதில் இருக்கும் கேலக்டாகோக் பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது
முருங்கை இலையில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ப்ரீ ரேடிகல்களுக்கு எதிராக போராடி முகத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதை குறைக்கிறது. முருங்கு பவுடர் பேஸ் மாஸ்க்காக சரும பராமரிப்புக்கு பயன்படுத்தலாம்
கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்கள் எலும்புகளுக்கு வலு சேர்க்கிறது. இதன் காரணமாக மேனோபாஸ் நிலைக்கு பிறகு எலும்புப்புரை பாதிப்பின் ஆபத்தை குறைக்கிறது
ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. டைப் 2 டயபிடிஸ் பாதிப்பு இருப்பவர்கள் எடுத்துக்கொள்ளக்கூடியதாக உள்ளது
அழற்சிக்கு எதிரான பண்புகள் பெண்களுக்கு ஏற்படும் கீல்வாதம், வீக்கம் போன்ற நிலைகளுக்கு எதிராக செயல்படுகிறது
இதில் இருக்கும் நார்ச்சத்து செரிமானத்தை சீராக்கி மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது
வயதான பின்பு ஏற்படும் இதயம் தொடர்பான நோய் பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்கிறது
பணம் சம்பாதிப்பதில் புரட்டி எடுக்க போகும் மகரம் ராசி! புரட்டாசி மாத ராசிபலன்கள்!