செம்பருத்தி டீ குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை தெரிந்து கொள்ளலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Aug 14, 2024

Hindustan Times
Tamil

செம்பருத்தி உங்களின் தோட்டத்தை அழகாக்கும் துடிப்பு மிக்க பூ செடியாக மட்டுமல்லாமல் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் கொண்டதாகவும் உள்ளது. இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கொண்ட இதை டீயாக தயார் செய்து பருகலாம்

கல்லீரல் ஆரோக்கியம், ரத்த அழுத்தம் கட்டுப்பாடு என பல்வேறு நன்மைகளை தருகிறது செம்பருத்தி டீ

செம்பருத்தி கல்லீரல் ஆரோக்கியத்துக்கு ஆதரவு அளிக்கிறது. கல்லீரலில் இருக்கும் நச்சுக்களை நீக்குவதோடு, இதில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய்க்கு எதிரான விளைவுகளை கொண்டுள்ளது

எடையிழப்புக்கு உதவி புரியும் செம்பருத்தி உடல் பருமன் அடைவதை தடுக்கிறது

ரத்த அழுத்தத்தை குறைக்கும் தன்மை செம்பருத்தியில் இருப்பது மருத்துவரீதியாக நிருபிக்கப்பட்டுள்ளது. இதய, சிறுநீரக நோய், பக்கவாதம் போன்ற தீவிர நிலைகள் ஏற்படுவதை தடுக்கிறது

அழற்ச்சிக்கு எதிரான பண்புகள் கொண்டிருக்கும் செம்பருத்தி உடலில் வீக்ககங்கள்  ஏற்படுவதை தடுக்கிறது

பீட்டா கரோடீன், வைட்டமின் சி மற்றும் ஆந்தோசையனின் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் செம்பருத்தியில் நிறைந்துள்ளன. இவை நோய் தொற்று ஏற்படாமல் தடுக்க உதவுகிறது

மாதுளை நன்மைகள்