புதிய 5ஜி ஸ்மார்ட்போனாக ரியல்மீ நார்சோ 70 இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் விலை, இதர அம்சங்களை பார்க்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Mar 20, 2024

Hindustan Times
Tamil

மிட் ரேஞ்ச் ஸ்மார்ட்போன்களாக ரியல்மீ நார்சோ 70 புரோ 5ஜி உள்ளது

ரியல்மீ நார்சோ 70 புரோ 5ஜி மீடியாடெக் 7050 புராசெஸ்சர், மாலி G68 MC4 GPU உடன் இணைக்கப்பட்டுள்ளது

இந்த போன் பிரதான கேமரா 50MP OIS உடன், 8MP அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், 2MP மேக்ரோ சென்சார் ஆகியவற்றை கொண்டுள்ளது. செல்ஃபி புகைப்படங்களை எடுக்க 16MP கேமரா உள்ளது

நார்சோ 70 புரொ 5ஜி, ரியல்மீ UI 5.0இல் இயங்குகிறது. இது ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது

இரண்டு ஆண்டுகளுக்கான ஆப்பரேட்டிங் சிஸ்டம் அப்டேட், 3 ஆண்டுகள் பாதுகாப்பு அம்சங்களுக்கான அப்டேட்கள் அளிக்கப்படுகிறது

இந்த போனில் 5,000mAh பேட்டரி, விரைவாக சார்ஜிங் செய்யக்கூடிய 67W SUPERVOOC சார்ஜரை கொண்டுள்ளது

கிளாஸ் க்ரீன், கிளாஸ் கோல்ட் ஆகிய வண்ணங்களில் இந்த போன்கள் கிடைத்துள்ளது. Realme.com, Amazon தளங்களில் மார்ச் 22ஆம் தேதி முதல் விற்பனைக்கு வர உள்ளது

நார்சோ 70 புரொ 5ஜி போன் 8GB RAM, 128GB வேரியண்ட் விலை ரூ. 19, 999 எனவும்,  8GB RAM, 256GB விலை ரூ. 21, 999 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ வங்கி கார்டுகளில் ரியல்மீ நார்சோ 70 புரொ 5ஜி போன்குக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது

மனதில் தைரியம் இருப்பவர்கள் இதனை செய்ய மாட்டார்கள்?