Raw Milk Side Effects: பச்சை பால் குடிப்பதால் உயிரிழக்கும் அபாயம் உள்ளதா?

pixa bay

By Pandeeswari Gurusamy
May 27, 2024

Hindustan Times
Tamil

பச்சை பால் என்பது பசுக்களிடமிருந்து நேரடியாக எடுக்கப்படும் பால். இவை விற்பனைக்கு வரும் முன்பாக பேஸ்டுரைஸ் செய்யப்படுகிறது. அதாவது பாலில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை குறைகிறது. மனித நுகர்வுக்கு பாதுகாப்பானது. மேலும் பாலைக் கெடுக்கும் பாக்டீரியாக்களைக் குறைக்கப்படுகிறது.

pixa bay

இந்த பேஸ்சுரைசேஷன் செயல்முறை பாலை பாதுகாப்பானதாக்குகிறது. ஆனால் பதப்படுத்தப்படாத பாலை, அதாவது பசுக்களிடமிருந்து நேரடியாக எடுக்கப்படும் பாலை அருந்துபவர்கள் ஏராளம். ஆனால் பாலை நீங்கள் குடிக்க வேண்டும் என்றால், அதை நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.  அதை பச்சை பால் குடிக்கக்கூடாது. இதன் காரணமாக, பல பாக்டீரியாக்கள் உடலில் நுழைய நாமே ஒரு வழியை உருவாக்கித் தருகிறோம்.

pixa bay

பச்சை பால் குடிப்பது சில வகையான நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்பு அபாயத்தை அதிகரிக்கிறது. 1900 ஆம் ஆண்டு அமெரிக்காவில் அசுத்தமான பாலை குடித்ததால் 65,000 பேர் இறந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் பசும்பால் குடித்ததால் பசுவுக்கு வரக்கூடிய காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது மனிதர்களை எளிதில் பாதிக்கிறது. இன்னும் மக்கள் பசும் பால் குடிக்கும் பகுதிகளில் இந்த நோய் காணப்படுகிறது.

pixa bay

Enter text Here

பச்சை பாலுடன் ஒப்பிடும்போது பேஸ்டுரைஸ் செய்யப்பட்ட பாலில் குறைவான ஊட்டச்சத்துக்கள் இருக்கலாம். ஆனால் ஆரோக்கியத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை. அத்தகைய பாக்டீரியா மற்றும் நச்சுகள் நீக்கப்படுகிறது. எனவே பேஸ்டுரைஸ் செய்யப்பட்ட பாலை கொதிக்க வைத்த பிறகு குடிப்பது நல்லது.

pixa bay

பச்சை பாலில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் என கருதப்படும் சால்மோனெல்லா, கேம்பிலோபாக்டர் மற்றும் கிரிப்டோபோரிடியம் போன்ற தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களால் பச்சை பால் மாசுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இது கீல்வாதம், குய்லின் பாரே நோய்க்குறி, ஹீமோலிடிக் யூரிமிக் நோய்க்குறி போன்ற கடுமையான நோய்களுக்கு வழிவகுக்கும். 

pixa bay

தொற்று வயிற்றுப்போக்கு, வாந்தி, நீரிழப்பு மற்றும் குமட்டல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே பேஸ்டுரைசேஷன் மூலம் பாக்டீரியாவை அழித்த பின்னரே பால் உட்கொள்வது சிறந்தது. பால் என்பது தாய் மாதிரி என்றே சொல்லலாம். 

pixa bay

 பாலை தினந்தோறும் குடித்து வந்தால் இயல்பாக உடலுக்கு நோய் எதிர்ப்பாற்றல் கிடைக்க உதவுகிறது. உடலுக்கு தேவையான கால்சியம், கொழுப்பு,  புரதம் உள்ளிட்ட சத்துக்கள் அதிகம் உள்ளது. ஆகவே நாம் நம்முடைய உணவுப் பழக்கத்தில் பால் அருந்துவதை பழக்கமாக உருவாக்கி கொள்ள வேண்டும்.

pixa bay

திரையுலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே இளைஞர்களின் மனதை கொள்ளை அடித்தவர் நடிகை யாஷிகா. பல திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகளில் பங்குபெற்றாலும், பிக்பாஸ் சீசன் 2 வும், ' ‘இருட்டு அறையில் முரட்டு குத்து ' என்ற அடல்ட் காமெடி படமும் இவரைப் பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கியது.