கேரள மாநிலத்தில் இந்த ஆண்டு இதுவரை எலிக்காய்ச்சலுக்கு 184 பேர் உயிரிழந்துள்ளனர்.
மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
மழைக்காலம் காரணமாக இந்த நோய் வருவது இயற்கையானது என அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
கேரளாவில் உள்ள விவசாய நிலங்களில் வேலை பார்ப்பவர்களும், எலி வளர்ப்பவர்களும் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படும் அபாயாம் உள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டில், கேரளாவில் பதிவான எலிக்காய்ச்சல் வழக்குகளின் எண்ணிக்கை 2079. இறப்பு எண்ணிக்கை 99 ஆகும். 2019 ஆம் ஆண்டில், எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1211 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 57 ஆகவும் இருந்தது.
ஒரு லிட்டர் எலி சிறுநீரில் 100 மில்லியன் நோய்க்கிருமி வெளியேறுகிறது.
இந்த எலிக்காய்ச்சலால் கேரள மாநில மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் கேரள எல்லையோர தமிழ்நாட்டின் பகுதிகளிலும் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர் .