18 மாதங்களுக்கு ஒரு முறை பெயர்ச்சி ஆகும் கிரகங்களாக சாயா கிரகங்கள் எனப்படும் ராகு - கேது ஆகிய கிரகங்கள் உள்ளன. வரும் மே மாதம் 18ஆம் தேதி அன்று பெயர்ச்சி ஆக உள்ளனர். ராகு பகவான் மீனம் ராசியில் இருந்து கும்பம் ராசிக்கும். கேது பகவான் கன்னி ராசியில் இருந்து சிம்மம் ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்.
By Kathiravan V Jan 19, 2025
Hindustan Times Tamil
விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு, சொந்த ஊரை விட்டு வெளியூர்களில் வேலை தேடுபவர்களுக்கு வேலை வாய்ப்புகள் உண்டாகும். பணியிடங்களில் அழுத்தங்கள் கூடும். அலுவலகத்தில் மேலதிகாரிகள் உடன் கருத்து முரண்பாடுகள் உண்டாகும் என்பதால் எச்சரிக்கை தேவை
தொழிலில் இருந்து ஓரளவு வருமானம் கிடைக்கும். ஆனால் பெரிய அளவிலான முதலீடுகளை தவிர்ப்பது நல்லது
உடல் நிலையில் இருந்து வந்த பாதிப்புகள் குறையும் என்றாலும் ஏதேனும் சில பாதிப்புகள் தொடரும். உணவுப்பழக்க வழக்கங்களில் கவனம் தேவை
மாணவர்களுக்கு கவனச்சிதறல் உண்டாகும். விளையாட்டுத் தன்மை கூடும். படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய காலம் இது
வீடு, நிலம், வண்டி, ஆபரண சேர்க்கை உண்டாகும்.
தசாபுத்தி சிறப்பாக இருப்பவர்களுக்கு திருமணமும், புத்திரபாக்கியமும் கைக்கூடும். விநாயகர் வழிபாடு வினைகளை தீர்த்து நன்மைகளை உண்டாக்கும்.
தாயாரில் உடல் நிலையில் கவனம் தேவை. சிலருக்கு தாயார் உடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.
உங்க குழந்தைகளின் தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருக்க என்ன செய்ய வேண்டும் பாருங்க!