18 மாதங்களுக்கு ஒரு முறை பெயர்ச்சி ஆகும் கிரகங்களாக சாயா கிரகங்கள் எனப்படும் ராகு - கேது ஆகிய கிரகங்கள் உள்ளன. வரும் மே மாதம் 18ஆம் தேதி அன்று பெயர்ச்சி ஆக உள்ளனர். ராகு பகவான் மீனம் ராசியில் இருந்து கும்பம் ராசிக்கும். கேது பகவான் கன்னி ராசியில் இருந்து சிம்மம் ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்.

By Kathiravan V
Jan 18, 2025

Hindustan Times
Tamil

மகரம் ராசிக்கு 2ஆம் வீட்டில் ராகு பகவனும், 8ஆம் வீட்டில் கேது பகவானும் இடபெயர உள்ளனர். வருமான ரீதியாக முன்னேற்றம் உண்டாகும். பணியிடத்தில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வருமானம் பெறுகும்

பேச்சு, தொழில்நுட்பம், ஏற்றுமதி இறக்குமதி உள்ளிட்ட தொழில்களில் உள்ளவர்களுக்கு சிறப்பான வளர்ச்சியும், வருமானமும் கிடைக்கும்.

குடும்ப உறவுகளிடம் இருந்து பணவரவு இருக்கும். சொந்த ஊரை விட்டு வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு செல்ல நல்ல காலகட்டம் இது. மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள நினைப்பவர்களுக்கு உடல் நிலை சரியாகும். சீர்கெட்ட ஆரோக்கியம் மேம்படும்

வேலை வாய்ப்பை எதிர்நோக்குபவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். சொந்த மண்ணை விட்டு வெளியிடங்களில் வேலை தேடினால் நன்மைகள் கிடைக்கும்.

தொழிலில் இருந்து வந்த தேக்கநிலை மாற்றி முன்னேற்றம் உண்டாகும். தொழில் சார்ந்த புதிய முயற்சிகள் வெற்றி பெறும்.

உத்யோகத்தில் வேறு வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் உண்டாகும்

அதே வேலையில் பேச்சில் கவனம் தேவை. உறவுகளிடமும், தொழில் செய்யும் இடத்திலும் பேச்சில் பொறுமையும் எச்சரிக்கையும் தேவை. இல்லை எனில் பெரும் பிரச்னைகள் உண்டாக வாய்ப்புகள் உள்ளது.

வீண் பேச்சால் குடும்பத்திலும், வெளியிடத்திலும் சிக்கல்கள் உண்டாகலாம். கொடுக்கல் வாங்கல் தொடர்பாக சில சிக்கல்கள் உண்டாகலாம். இந்த நேரத்தில் பிறருக்கு ஜவாப், ஜாமீன் தருவதை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவி உறவுகளில் சில கருத்து வேறுபாடுகள் வரலாம்.

நெய் ஏன் பயன்படுத்த வேண்டும் தெரியுமா..! இந்த 6 காரணங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

image credit to unsplash