ராகு பகவானின் கும்ப ராசி பயணத்தால் பணக்கார யோகத்தை பெறுகின்ற ராசிகள் 

Canva

By Suriyakumar Jayabalan
May 09, 2025

Hindustan Times
Tamil

நவகிரகங்களின் நிழல் கிரகமாக விளங்க கூடியவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக ராக விளங்கி வருகின்றார். ராகு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். இவருக்கு சொந்தமான ராசி கிடையாது. 

Canva

தற்போது ராகு பகவான் மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்நிலையில் வருகின்றமே பதினெட்டாம் தேதி என்று ராகு பகவான் தனது ராசி மாற்றத்தை செய்ய உள்ளார் ராகு பகவான் சனி பகவானின் ராசியான கும்ப ராசியில் நுழைய உள்ளார். 

Canva

ராகு பகவான் வருகின்ற 2026 டிசம்பர் 5ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்வார். ராகு பகவானின் கும்ப ராசி பயணம் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

Canva

ரிஷப ராசி: உங்கள் ராசியில் கர்ம வீட்டில் ராகு நுழைகிறார். இதனால் உங்களுக்கு வேலை மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. 

Canva

தனுசு ராசி: உங்கள் ராசியில் தைரியம் வீட்டில் ராகு பகவான் பயணம் செய்யப் போகின்ற காரணத்தினால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும் என கூறப்படுகிறது. உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. 

Canva

மிதுன ராசி: உங்கள் ராசியில் அதிர்ஷ்டம் வீட்டில் ராகு பகவான் நுழையப் போகின்றார். இதனால் உங்களுக்கு தூங்கிக் கொண்டிருந்த பணக்கார யோகம் தேடி வரும் என கூறப்படுகிறது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் என கூறப்படுகிறது. 

Canva

பொறுப்பு துறப்பு : இந்த தகவல் நம்பிக்கைகள், வேதங்கள் மற்றும் பல்வேறு ஊடகங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. தகவல் நோக்கங்களுக்கு மட்டுமே. எந்தவொரு தகவலையும் ஏற்றுக்கொள்வதற்கு முன் நிபுணர்களை அணுகவும்.

Canva

அப்துல் கலாமின் இந்த வாக்கியங்களை குழந்தைகளிடம் கூறுங்கள்; அவர்களை உற்சாகப்படுத்தும்!