ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களில் நிழல் கிரகமாக விளங்க கூடியவர் ராகு பகவான். இவர் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக ராகு பகவான் விளங்கி வருகின்றார். ராகு பகவான் சொந்த ராசி இல்லாமல் பயணம் செய்யக்கூடியவர்.
Canva
தற்போது ராகு பகவான் மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த மே மாதம் ராகு பகவான் மீன ராசியில் இருந்து வக்கிர நிலையில் கும்ப ராசிக்கு செல்கின்றார். இது சனி பகவானின் சொந்தமான ராசியாகும்.
Canva
ராகு பகவானின் கும்ப ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகளில் மூலம் பணக்கார யோகத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
Canva
துலாம் ராசி: உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் ராகு பகவான் பயணம் செய்யப் போகின்றார் அதனால் உங்களுக்கு முன்னேற்றம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என கூறப்படுகிறது. திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது.
Canva
சிம்ம ராசி: உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் ராகு பகவான் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
Canva
கன்னி ராசி: உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் ராகு பகவான் பயணம் செய்யப்போகின்றார். இதனால் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் என கூறப்படுகிறது. குடும்பத்தினரோடு ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும் எனக் கூறப்படுகிறது.
Canva
பொறுப்பு துறப்பு : இந்த தகவல் நம்பிக்கைகள், வேதங்கள் மற்றும் பல்வேறு ஊடகங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. தகவல் நோக்கங்களுக்கு மட்டுமே. எந்தவொரு தகவலையும் ஏற்றுக்கொள்வதற்கு முன் நிபுணர்களை அணுகவும்.
Canva
சனி பகவான் ஒரு நீதிமான், துலாம் ராசியில் அவர் உச்சம் அடைவார். கும்பம், மகரம் ராசிகளில் அவர் ஆட்சி ஆவார். மேஷ ராசியில் அவர் நீச்சம் அடைவார்.