’ராகுவால் லாட்டரி யோகம் அடிக்குது! காதல் திருமணம் நடக்குது!’ கடகம் ராசிக்கான ராகு கேது பெயர்ச்சி பலன்கள்!
By Kathiravan V Nov 19, 2024
Hindustan Times Tamil
18 மாதங்களுக்கு ஒரு முறை பெயர்ச்சி ஆகும் கிரகங்களாக சாயா கிரகங்கள் எனப்படும் ராகு - கேது ஆகிய கிரகங்கள் உள்ளன. வரும் மே மாதம் 18ஆம் தேதி அன்று பெயர்ச்சி ஆக உள்ளனர். ராகு பகவான் மீனம் ராசியில் இருந்து கும்பம் ராசிக்கும். கேது பகவான் கன்னி ராசியில் இருந்து சிம்மம் ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்.
மாய சிந்தனையை உருவாக்கும் நிலையை ராகு பகவானும், ஞான சிந்தனையை உருவாக்கும் நிலையை கேது பகவானும் அளிக்கின்றனர். இந்த இரண்டு கிரகங்களும் இருக்கும் வீட்டின் உடைய அதிபதியின் பலன்களை தரும் தன்மைகளை பெற்று உள்ளன.
கடகம் ராசிக்காரர்கள் கடந்த சில மாதங்களாக கடும் சிரமத்தை சந்தித்து வந்தீர்கள். அஷ்டம சனி பாதிப்பு மன உளைச்சல்களை தந்த நிலையில் ராகு கேது பெயர்ச்சி பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.
2ஆம் இடத்தில் அமர உள்ள கேது பகவானால் அரசு வழியில் நன்மைகளும், அனுகூலங்களும் உண்டாகும். அரசு வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு வேலை வாய்ப்பு உண்டாகும். கடன் சார்ந்த பிரச்னைகளில் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
வீட்டில் பணவரவு கூடும். இட மாற்றம், வீடு மாற்றம், மனை மாற்றம் உண்டாகும். வேலை கிடைப்பதில் இருந்த பிரச்னைகள் விலகும். பணியிடங்களில் இருந்து வந்த சங்கடங்கள் நீங்கும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு கூடும்.
காதல் திருமணம் கைக்கூடும். திருமணம் சார்ந்த உறவுகளில் இருந்து வந்த பிரச்னைகள் விலகும். கணவன், மனைவி இடையே ஒற்றுமை பெருகும். 8ஆம் இடத்தில் உள்ள ராகு பகவான் அதிக செல்வ வரவை உண்டாக்கி தருவார். இதுவரை நீங்கள் அனுபவித்து வந்த சங்கடங்கள் தீரும்.
வெளியூர் மற்றும் வெளிநாட்டு தொடர்புகள் மூலம் வணிகம் பெருகும். பங்குச்சந்தை முதலீடுகள் லாபத்தை தரும். வட்டித் தொழில், விவசாயம் செய்பவர்களுக்கு ஆதாயம் கிடைக்கும். புதிய முதலீடுகளை செய்வீர்கள். நீதிமன்ற வழக்குகள் முடிவுக்கு வரும். சேமிப்பில் ஆர்வம் பிறக்கும்.
’ராகுவால் லாட்டரி யோகம் அடிக்குது! காதல் திருமணம் நடக்குது!’ கடகம் ராசிக்கான ராகு கேது பெயர்ச்சி பலன்கள்!
வெளிநாட்டு வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு விசா கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உங்கள் செயல்பாடுகளுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். திருமணம் தவறிய உறவுகளில் இருப்பவர்களுக்கு சிக்கல்கள் உண்டாகும்.
குளிர்காலத்தில் இலவங்கப்பட்டை தேநீர் குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்!