ராகியில் பஞ்சு போல இட்லி.. வீட்டிலேயே எப்படி செய்வது பாருங்க.. சத்தானதும் கூட
Canva
By Pandeeswari Gurusamy Mar 14, 2025
Hindustan Times Tamil
ஹெல்தியான ராகி இட்லி செய்ய தேவையான பொருட்கள்:
ராகி, சிகப்பு அரிசி, சிகப்பு அவல், உளுந்து, உப்பு தேவையான அளவு,
Canva
இரண்டு டம்பளர் ராகியை நன்றாக கழுவி சுத்தம் செய்து எடுத்து கொள்ள வேண்டும். அதை நன்றாக ஊற விட வேண்டும்.
Pixabay
அதேபோல் 2 டம்ளர் சிகப்பரிசியை அளந்து எடுத்து நன்றாக கழுவி ஊற வைத்து கொள்ள வேண்டும். அதே டம்ளரில் ஒரு டம்ளர் உளுந்தையும் கழுவி ஊற வைத்து கொள்ள வேண்டும்.
pixabay
ஒரு டம்ளர் சிகப்பு அவலை சுத்தம் செய்து கழுவி உற வைத்து கொள்ள வேண்டும். இதற்கு ஒரு ஸ்பூன் வெந்தயத்தை தனியாக தண்ணீர் விட்டு உற வைத்து கொள்ள வேண்டும்.
pixabay
அரிசி ராகியை குறைந்தது 5 மணி நேரம் வரை வரை ஊற வைக்க வேண்டும். ஆனால் அவல் உளுந்தை அரைப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன் ஊற வைத்தால் போதுமானது.
pixabay
முதலில் ஊற வைத்த வெந்தயத்தை கிரைண்டரில் சேர்த்து அரைக்க வேண்டும். ஒரு 3 நிமிடம் வெந்தயம் ஓடும் போது வெந்தயம் பொது பொதவென வர ஆரம்பிக்கும். அந்த சமயத்தில் உளுந்தை சேர்த்து அரைக்க வேண்டும். உளுந்தையும் வெந்தயத்தையும் குறைந்தது 25 நிமிடம் வரை அரைக்க வேண்டும்.
pixabay
உளுந்தை அரைத்து ஒரு பாத்திரத்திற்கு மாற்றிய பின் அதில் ஊற வைத்த சிகப்பு அவலை அரைக்க வேண்டும். சிகப்பு அவலை அரைத்து எடுத்த பின் அதில் ஊற வைத்த சிகப்பு அரிசி மற்றும் ராகியை சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும்.
pixabay
பின்னர் அரைத்த மாவை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கை வைத்து நன்றாக கிளறி விட வேண்டும். இந்த மாவை குறைந்தது 8 மணி நேரம் புளிக்க விட வேண்டும்.
Canva
பின்னர் வழக்கம்போல் நாம் இட்லி தட்டில் துணி வைத்து இட்லி ஊற்றி கொள்ள வேண்டும். நன்றாக வேக வைத்து எடுத்தால் மெத் மெத் என ஸ்பான்ஞ்ச் போன்ற ராகி இட்லி ரெடி. குழந்தைகளுக்கு சத்தானதும் கூட.
Canva
தேனி மாவட்டத்தில் பிறந்து திரைத்துறையில் கோலோச்சிய திரை ஆளுமைகள் குறித்து அறிவோமோ?