ராகு யாருக்கு கொடுப்பார்? யாரை கெடுப்பார்?

By Kathiravan V
Sep 11, 2023

Hindustan Times
Tamil

ராகு பகவான், சூரியனை ஒரு முறை அபிரதஷிணமாக சுற்றிவவர பதினெட்டரை வருடங்கள் ஆகும். 

புராணத்தில் கரும்பாம்பு என்று அழைக்கப்படும் ராகு கிரகம் ஜோதிட சாஸ்திரத்தின் படி எட்டாவது கிரகம் இதை சாயா கிரகம் என்று கூறுவார்கள் நிழல் கிரகம் என்றும் கூறுவார்கள். சாயா என்றால் நிழல் என்று பொருள். அவர்கென எந்த ராசியிலும் ஆதிபத்தியமில்லை. எந்த வீட்டில் இருக்கிறாரோ அதுவே அவரது சொந்த வீடாகும். 

எந்த ராசியில் இருக்கிறாரோ எந்த கிரகத்தினால் பார்க்கப்படுகிறாரோ எந்த இடத்தில் சோக்கைபெற்றுள்ளாரோ அந்த இடத்தின் பலனை முழுமையாகத்தருவார் ஒருசில ஜோதிட சாஸ்திர நுல்கள் மட்டும் ரிசபம் இவருக்கு உச்சவீடு என்றும் விருச்சிகம் நீச வீடு என்றும் கன்னி இவருக்குச் சொந்த வீடு என்றும் குறிப்பிடுகிறது. 

நவக்கிரகங்களில் மிகவும் பலம் வாய்ந்தவர் சனியை விட செவ்வாயும் செவ்வாயை விட புதனும் புதனை விட குருவும் குருவை விட சுக்கிரனும். சுக்கிரனை விட சந்திரனும் சந்திரனை விட சூரியனும் இவர்கள் அனைவரை விட ராகுவும் கேதுவும் பலம் பொருந்தி விளங்குகிறார்கள்.

சந்திர சூரியர்களையே பலமிழக்கும் படி செய்யவும் ஒளி குன்றும்படி செய்யவும் ராகுவுக்கு ஆற்றல் உண்டு

ராகு யோகத்திற்கு அதிபதி வீரிய பாம்பைப்பற்றி விளங்கச் சொல்லுவாய் யோகந்தன்னை என்ற படி யோக யோகத்தைத் தருபவர் ஒருவர் ஜாதகத்தில் ராகு நல்ல இடத்தில் இருந்தால் நல்லவர் சோக்கை மற்றும் சுபகிரக பார் வை இருந்தால் ராகு அந்த ஜாதகனை சீமானாகவும் அரசர்க்கு ஒப்பானவராகவும் வாழச் செய்வார்.அதனால் தான்“ராகுவைப் போல் கொடுப்பாரில்லை” என்று சொல்லப்படுகிறது.

அரசாங்கத்தில் பதவி-புகழ் இவற்றைப் பெறுவதற்கும் அதிகார அற்றலை அடைவதற்கும் உலகியல் விஷயங்களில் அறிவைத் தருவதற்கும் உள்ளத்தில் தெளிவை தருவதற்கும் அனைத்துலகிலும் பயணம் செய்வதற்கும் ராகு பலம் வேண்டும்.

மேலும் பலம் பெற்ற ராகு ஓர் ஆண் மகனுக்குப் பெண்கள் மூலம் சுகத்தையும் செல்வத்தையும்  கொடுப்பான் ஸ்பெகுலேஷன் துறை மூலம் ஒருவனைக் கோடீஸ்வரனாக்குவான் ராகு. அன்னியமொழி பேசுபவர்கள் மூலம் அதிகம் லாபங்களை கொடுப்பவர் ராகுபகவான் ஆகும். 

கெட்ட வழிகளில் கூட ஒருவனை பொருளாதாரத்தில் உயர்த்துவதில் ராகுவிற்கு நிகர் ராகுவேதான். சூதாட்டம் போன்ற வகைகளில் பணம் சம்பாதிப்பது பொய் சொல்லி ஏமாற்றுதல் அரசாங்கத்திற்கு எதிரான செயல்கள் செய்து பணம் ஈட்டுவது (கள்ளக்கடத்தல் ) போன்றவை ஆகும். சுபபலம் பெற்ற சனி ஒருவருக்கு எந்த அளவுக்கு உயர்வைத் தருவானோ அந்த அளவுக்கு உயர்வைத் தருவான் ராகு. 

நெய்