உடல் எடை குறைப்புக்கு சிறந்த ஸ்நாக்ஸ் சாய்ஸ் ஆக இருந்து வருகிறது அரிசி பொறி 

By Muthu Vinayagam Kosalairaman
Jul 02, 2024

Hindustan Times
Tamil

மொறு மொறு என இருக்கும் அரிசி பொறி ஆரோக்கியம் மிக்க ஸ்நாக்ஸ் ஆக இருந்து வருகிறது. இதனால் பாதிப்புகள் எதுவும் பெரிதாக இருக்காது

செரிமான ஆரோக்கியம், எலும்பு ஆரோக்கியம், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது என பல்வேறு உடல் ஆரோக்கிய நன்மைகளை தருகிறது

குறைவான கலோரிகளை கொண்டிருக்கும் பொறி உடல் எடை குறைப்புக்கான சிறந்த தேர்வாக உள்ளது. எடை இழப்புக்கான உணவு டயட்டுக்கு உகந்த ஸ்நோக்ஸ் ஆக இதை சாப்பிடலாம்

இதில் நார்ச்சத்து, கால்சியம், இரும்பு, செல்கள் வளர்ச்சி போன்றவற்றுக்கும் உதவி புரிகிறது. இதனால் எலும்புகள் ஆரோக்கியம் வலு பெறுகிறது

இரைப்பை குடல் பிரச்னையை தணிக்க உதவுகிறது. வயிறு உப்புசம், வாயு பிரச்னை, நெஞ்சு எரிச்சல் போன்ற செரிமான பிரச்னையை போக்க உதவுகிறது

இதில் குறைவான சோடியம் உள்ளடக்கம் இருப்பதால் வெறும் பொறியானது அதிக ரத்த சர்க்கரை அளவு ஏற்படாமல் நிர்வகிக்கிறது

பொறியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், நோய் எதிர்ப்பு அமைப்புக்கு ஆதரவு அளித்து நோய் பாதிப்பு ஏற்படுவதை தடுக்கிறது

சியா விதை தருகின்ற நன்மைகள்