அஜய் தேவ்கன் நடித்த மைதான் படத்தில் நடித்திருப்பதன் மூலம் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறார் நடிகை பிரியாமணி. தென்னிந்திய மொழி படங்கள் மற்றும் பாலிவுட் படங்களில் நடித்து வரும் பிரியாமணி கலாட்டா ப்ளஸ் சேனலுக்கு பேட்டியளித்தார்.

By Kalyani Pandiyan S
Apr 10, 2024

Hindustan Times
Tamil

அந்த பேட்டியில் அவரிடம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்து வரும் முன்னணி கதாநாயகர்களுடன் நடிக்காதது ஏன் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த பிரியாமணி, "நான் முன்னணி நடிகர்களுடன் நடிக்க ஏன் தேர்வுசெய்யப்படவில்லை என்பதில் எனக்கும் ஆச்சரியம் இருக்கிறது.அதற்கு இப்போது வரை விடை கிடைக்கவில்லை.

இந்த கேள்வி தயாரிப்பாளர்களிடமும், இயக்குநர்களிடமும் கேட்கப்பட வேண்டிய கேள்வி ஆகும். உண்மையாகச் சொல்கிறேன். நான் யாரிடம் குறை கண்டுபிடித்துக்கொண்டிருக்கவில்லை. ஆனால் நான் இதை பல பேரிடம் கேட்டு இருக்கிறேன். நான் அவர்களுடன் சேர்ந்து நடித்தாலோ இல்லை அவர்களது எதிரில் நின்று நடித்தாலோ அவர்களை நான் சாப்பிட்டு விடுவேன் (  நடிப்புத்திறமையால் அவர்கள் வென்று விடுவது)  என்று நினைக்கிறார்களாம். 

இதைத்தான் நான் நீண்ட காலமாக கேள்வி பட்டுக்கொண்டிருக்கிறேன். ஆனால் அதில் உண்மை இல்லை என்பது எனக்குத் தெரியும். இருப்பினும் உண்மையான காரணம் என்ன என்பது எனக்குத் தெரியவில்லை. காரணம் என்னவாக இருந்தாலும் நான் இருக்கும் இடத்தில் மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் இருக்கிறேன்.” என்று பேசினார்.

இருப்பினும் உண்மையான காரணம் என்ன என்பது எனக்குத் தெரியவில்லை. காரணம் என்னவாக இருந்தாலும் நான் இருக்கும் இடத்தில் மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் இருக்கிறேன்.” என்று பேசினார்.