குட் பேட் அக்லி படத்தில் மலையாள நடிகை பிரியா வாரியர் அர்ஜூன் தாஸின் காதலியாக நடித்தார்.
By Kalyani Pandiyan S Apr 13, 2025
Hindustan Times Tamil
அர்ஜூன் தாஸூடன் ‘தொட்டு தொட்டு பேசும் சுல்தானா’ பாடலுக்கு அவர் ஆடிய நடனம் ரசிகர்கள் மட்டுமல்லாது, சமூக வலைதளங்களிலும் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில், ஹைதராபாத்தில் நடந்த குட் பேட் அக்லி படத்தின் வெற்றிக்கொண்டாட்டத்தில் நடிகை பிரியா கலந்து கொண்டு பேசினார்.
அதில் அவர் பேசும் போது, ‘எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது; என்ன சொல்வது என்று தெரியவில்லை. நான் உண்மையில் இதனை எதிர்பார்க்கவில்லை. என்னுடைய போனுக்கு தொடர்ந்து வாழ்த்து மடல்கள் வந்து கொண்டே இருக்கின்றன.
பலரும் 2018ல் ‘அடார் லவ்’ படத்தில் நான் வைரலானது போல மீண்டும் வைரல் ஆகிவிட்டாய் என்று என்னிடம் சொல்கிறார்கள்.
உண்மையில் நான் இதனை எதிர்பார்க்கவே இல்லை.
என்னுடைய எதிர்பார்ப்பெல்லாம் இந்த படத்தில் அஜித் சாருடன் நடிக்கலாம், அவருடன் ஒரே ஃப்ரேமில் இருக்கலாம் என்பதுதாகத்தான் இருந்தது. ' என்று பேசினார்.
கோடை காலத்தில் சில எளிய டிப்ஸ்களை பின்பற்ற சருமத்தில் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கலாம். சருமத்தை பேனி காக்க உதவும் சில எளிய டிப்ஸ்களை தெரிந்து கொள்ளலாம்