’ராமர் பாதம் பட்ட இடம்! விபீஷணன் பட்டம் பெற்ற இடம்!’ பிரதமர் சென்ற அரிச்சல் முனைக்கு இத்தனை சிறப்புகளா?
By Kathiravan V Jan 21, 2024
Hindustan Times Tamil
அயோத்தி ராமர் கோயிலில் நாளைய தினம் பிராண பிரதிஷ்டை செய்யப்பட உள்ள நிலையில் தொடர் கோயில் வழிபாடுகளை பிரதமர் நரேந்திர மோடி நடத்தி வருகிறார்.
நேற்றைய தினம் திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலிலும், ராமேஸ்வரம் கோயிலும் வழிபாடு நடத்திய மோடி நேற்றிரவு ராமகிருஷ்ண மடத்திலேயே தங்கினார்.
இன்று காலை தனுஷ்கோடியில் உள்ள அரிச்சல் முனை பகுதிக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி அங்கு வழிபாடுகளை நடத்தினார்.
இந்த அரிச்சல் முனை பகுதியில் இருந்துதான் ராமர் பாலம் தொடங்குவதாக ஐதீகம் உள்ளது.
ஆதாமின் பாலம் என்றும் அழைக்கப்படும் ராமர் சேது, ராவணனுக்கு எதிராக இலங்கைக்கு போரை நடத்துவதற்காக 'வானர சேனா' உதவியுடன் ராமரால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
ராவணனின் தம்பியான விபிஷனணை ராமர் இங்குதான் சந்தித்து பேசியதாக புராண இதிகாசங்களில் கூறப்பட்டுள்ளது. மேலும் விபிஷணனுக்கு பட்டாபிஷேகமும் இங்கு நடததாக இதிகாசங்கள் கூறுகின்றன.
இத்தகையை சிறப்பு வாய்ந்த அரிச்சல் முனை பகுதியில் உள்ள கோதண்ட ராமர் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார்.
அரிச்சல் முனையில் உள்ள கடற்கரை பகுதியில் மலர்களை தூவிய பிரதமர் மோடி, பிரணாயாமம் செய்தார்.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்ப்பட்டுள்ள ராமர் கோயிலுக்கு நாளை பிராண பிரதிஷ்டை நடைபெற உள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் இந்த வழிபாடு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
உங்கள் ஒரு கப் காபியில் இருக்கும் ரகசிய நன்மைகள் இதோ!