தைராய்டு ஆரோக்கியத்தை வலுவாக வைக்கும் பானங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Aug 30, 2024

Hindustan Times
Tamil

தொண்டையின் முன் பகுதியில் பட்டுப்பூச்சி வடிவில் இருக்கும் சிறிய சுரப்பி தான் தைராய்டு. இது வளர்சிதை மாற்றம், வளர்ச்சி, இதய துடிப்பு சீராக வைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது

பல்லேறு உடல் உறுப்புகளின் செயல்பாட்டுக்கு முக்கிய பங்காற்றும் தைராய்டு ஆரோக்கியத்தை சில பானங்களின் மூலம் பராமரிக்கலாம்

தைராய்டு செயல்பாட்டை சீராக வைக்க நாம் பின்பற்றும் டயட் முக்கிய பங்கு வகிக்கிறது. அத்துடன் சில வாழ்க்கைமுறை மாற்றங்களையும் மேற்கொள்வதன் மூலம் நன்மை பெறலாம்

வைட்டமின் சி அதிகம் நிறைந்திருக்கும் எலுமிச்சை நீர் உடலை சமநிலையுடனும், நச்சுக்களை நீக்கவும் உதவுகிறது. டையுரிடிக் செயல்பட்டு நோய் எதிர்ப்பு அமைப்பை வலுப்படுத்துகிறது

கொலஸ்ட்ரால் அளவை குறைத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, உடல் நச்சுக்களை நீக்குவதில் வெள்ளரி நீர் முக்கிய பங்காற்றுகிறது. பார்வைதிறனை பாதுகாத்து தைராய்டு செயல்பாட்டை மேம்படுத்துகிறது

ரத்த சர்க்கரை அளவை சீராக்குவதோடு, நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வை தருகிறது. சாப்பிட்ட பின் ஏற்படும் ரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க ஒரு டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை தண்ணீரில் சேர்த்து பருக வேண்டும்

வைட்டமின் ஏ, சி, கே, பேலேட், பொட்டாசியம் நிறைந்த செலரி ஜூஸ் செரிமானத்தை மேம்படுத்தி, வீக்கங்களை குறைத்து, ஒட்டு மொத்த உடல் உறுப்பு செயல்பாட்டுக்கும் ஆதரவளிக்கிறது

மஞ்சள், மிளகு கலந்த பால்1 பாக்டீரியா, அழற்சிகளுக்கு எதிரான பண்புகளை கொண்டிருகிறது.  தைராய்டு சுரப்பியையும் ஆற்றுப்படுத்தும் தன்மை கொண்டுள்ளது

பல்வேறு விதமான மருத்துவ குணங்கள் கொண்ட பழம் இலந்தைப்பழம் இருந்து வருகிறது. இதில் உள்ள ஆரோக்கிய நன்மைகளை தெரிந்து கொள்ளலாம்

Image Credits: Adobe Stock