பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்த உணவுகள் உடலில் ரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுகிறது 

By Muthu Vinayagam Kosalairaman
Apr 01, 2024

Hindustan Times
Tamil

உடலுக்கு அத்தியாவசிய தாதுவாகவும், எலக்ட்ரோலைட்டாகவும் இருந்து வரும் பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுகிறது. செல்களில் ஊட்டச்சத்துகள் பயணிப்பதை எளிதாக்குகிறது. நரம்பு மற்றும் தசை செயல்பாட்டை ஊக்குவிக்கிறது

வாழைப்பழம் தவிர பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்திருக்கும் உணவு வகைகள் எவை என்பதை பார்க்கலாம்

அதிக அளவில் ஊட்டச்சத்துகள் நிறைந்திருக்கும் சீனிக்கிழங்கு உடலுக்கு தேவையான பொட்டாசியம் நுகர்வை அதிகரிக்க உதவுகிறது

ஏராளமான ஊட்டச்சத்துகளை கொண்டிருக்கும் அவகோடா பழங்கள் உடலுக்கான தினசரி பொட்டசியம் தேவையை 15 சதவீதம் வரை பூர்த்தி செய்கிறது. அத்துடன் வைட்டமின் கே மற்றும் போலேட்களின் ஆதாரமாக உள்ளது

இரண்டு துண்டுகள் தர்ப்பூசணி 14 சதவீதம் பொட்டாசியம் தேவையை பூர்த்தி செய்கிறது. இதனுடன் பல்வேறு வைட்டமின்கள், தாதுக்களையும் தருகிறது

ஒரு கப் பசலை கீரை 12 சதவீதம் வரை பொட்டாசியம் தேவையை பூர்த்தி செய்கிறது. போலேட், மெக்னீசியம், வைட்டமின் ஏ மற்றும் கே சத்துக்களும் இதில் நிறைந்துள்ளன

Enter text Heபொட்டசியம் சத்துக்களின் சிறந்த ஆதாரமாக பீன்ஸ்கள் இருக்கின்றன. கருப்பு பீன்ஸை காட்டிலும் வெள்ளை பீன்ஸ்களில் அதிக பொட்டாசியம் சத்துக்கள் இருப்பதுடன், சாப்பிடும் உணவில் அதிக தாதுக்களை பெறவும் உதவுகிறதுre

நீரேற்றத்தை தரும் பானமாக இருப்பதோடு, ஒரு கப் இளநீர் 13 சதவீதம் வரை தினசரி பொட்டாசியம் தேவையை பூர்த்தி செய்கிறது. இதில் மெக்னீசியம், சோடியம், மாங்கனீசு சத்துக்களும் நிறைந்துள்ளன

உருளை கிழங்கு இல்லாத வீடுகளே இல்லை என்று கூறலாம். அனைவராலும் விரும்பி சாப்பிடக்கூடிய உருளை கிழங்கில் பொட்டாசியம், இதர தாதுக்கள் நிறைந்துள்ளன. 12 சதவீதம் தினசரி பொட்டாசியம் தேவையை பூர்த்தி செய்கிறது

உருளை கிழங்கு இல்லாத வீடுகளே இல்லை என்று கூறலாம். அனைவராலும் விரும்பி சாப்பிடக்கூடிய உருளை கிழங்கில் பொட்டாசியம், இதர தாதுக்கள் நிறைந்துள்ளன. 12 சதவீதம் தினசரி பொட்டாசியம் தேவையை பூர்த்தி செய்கிறது

செகண்ட் ஹேண்ட் கார் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை