கணவர் மகேந்திரன் குறித்து நடிகை பிரேமி!

By Kalyani Pandiyan S
Apr 15, 2024

Hindustan Times
Tamil

இது குறித்து பெட்டர் டுடே யூடியூப் சேனலுக்கு கடந்த சிலமாதங்களுக்கு  முன்னர் பேசிய அவர்,   “எனக்கு மகேந்திரன் சாரை முதலில் தெரியாது. நடிகர் செந்தாமரை மூலமாகத்தான் பழக்கம் ஏற்பட்டது.  

அதன்பிறகு முள்ளும் மலரும் திரைப்படத்திற்கு ஆடிசனுக்கு என்னை அழைத்தார்கள். ஆனால், அங்கு செல்வதற்கு முன்னே அங்கு போக வேண்டாம் என்று என்னுடைய மனது கூறியது. அதனால் நான் அங்கு செல்லவில்லை. 

உதிரிப்பூக்கள் திரைப்படத்தின் இயக்குநர் இவர்தான் என்று முதலில் எனக்கு தெரியாது. அது தெரியாமல், நான் அந்த ஹோட்டலுக்கு சென்றேன். பார்த்தால் அங்கு மகேந்திரன் இருக்கிறார். அதன் பின்னர்தான் அந்தப்படத்தின் இயக்குநர் அவர் என்று தெரிய வந்தது. 

நாங்கள் ஒருவரை ஒருவர் சந்தித்தோம்,பார்த்தோம், பழகினோம். விருப்பப்பட்டோம். அவருக்கு கல்யாணம் ஆகிவிட்டது என்று எனக்கு தெரியும். ஆனாலும் நான் அவரை விரும்பினேன். அது தவறு. 

அவருக்கு கல்யாணம் ஆகி விட்டது என்று தெரிந்த பின்னராவது நான் அவரை விட்டு சென்று இருக்க வேண்டும். அதுதான் நியாயமான விஷயம். அந்த விஷயத்தில் நான் செய்தது தவறுதான். அதற்கான தண்டனையை நான் நன்றாகவே அனுபவித்து விட்டேன்.” என்று பேசினார். 

பலாப்பழம் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?

Pexels