Pomegranate Peel : மாதுளை பழ தோலில் அடங்கி உள்ள நன்மைகள்!

pixa bay

By Pandeeswari Gurusamy
Jun 06, 2024

Hindustan Times
Tamil

மாதுளை பழ தோல்களில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாலிஃபினால்கள் உள்ளது. இவை சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் கருந்திட்டுகளை போக்குகிறது. முகப்பருக்களை போக்க இது உதவுகிறது. சருமத்திற்கு நிறத்தையும், பொலிவையும் கொடுக்கிறது. புறஊதா கதிர்கள் ஏற்படுத்தும் சேதத்தில் இருந்து சருமத்தை மாதுளை பழத்தோல் காக்கிறது. இது வயோதிகத்தை தாமதப்படுத்துகிறது.

pixa bay

மாதுளை பழத்தோலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நாள்பட்ட நோய்களான இதய நோய்கள் மற்றும் சர்க்கரை நோயை முற்றிலும் குணப்படுத்துகிறது.

pixa bay

மாதுளை பழத்தின் தோல்களை சப்ளிமென்டாக எடுத்துக்கொள்ளும்போது, அது உடலில் கொழுப்பு மற்றும் ரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது. குறிப்பாக அதிக எடை மற்றும் உடல் பருமன் உள்ளவர்களுக்கு வீக்கத்தை குறைக்கும் ஒன்றாக பயன்படுகிறது.

pixa bay

மாதுளை பழத்தோலில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், அல்சைமர்ஸ் எனப்படும் மறதிநோயால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துகிறது. நினைவாற்றல் திறனை அதிகரிக்கிறது.

pixa bay

மாதுளை பழத்தோலில் உள்ள புனிகெலானினின் என்ற பாலிஃபினாலின் உட்பொருள், புற்றுநோய்க்கு எதிராக குணங்களைக் கொண்டுள்ளது. மாதுளை பழத்தோல், புற்றுநோய்கள் கட்டிகள் உருவாகும் வாய்ப்பை தள்ளிப்போடுகிறது அல்லது குறைக்க உதவுகிறது.

pixa bay

மாதுளை பழத்தோலை, வாயை சுத்தம் செய்யவும், பற்பசைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இதன் சாறு, பற்களில் ப்ளேக் உருவாவதை தடுக்கிறது. பற்சிதைவைத் தடுக்கிறது. இதில் உள்ள ஆன்டிபாக்டீரியல் உட்பொருட்கள், வாய் அல்சரை குணப்படுத்த உதவுகிறது. பல் மற்றும் ஈறுகளின நோய்களை எதிர்த்து போராடுகிறது.

pixa bay

ருமட்டாய்ட் ஆர்த்ரிடிஸ், ஆட்டோ இம்யூன் நோய் ஆகும். இது ஏற்பட்டால் மூட்டுகள் வீங்கும். மாதுளை பழத்தோலில் உள்ள உட்பொருட்கள், பலமான ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வீக்கத்துக்கு எதிரான குணங்கள், ருமட்டாய்ட் ஆர்த்ரிடிசின் தீவிரத்தை குறைக்கும்.

pixa bay

மாதுளை பழத்தோலில் உள்ள முக்கிய மினரல்கள் மற்றும் பயோஆக்டிவ் உட்பொருட்கள், எலும்பு இழப்பை தடுக்கும். புதிய எலும்பு திசுக்களை உருவாக்கும். மாதுளை பழத்தோல் தேநீரை, தினமும் பருகும்போது, மெனோபாஸ் காலத்தில் உள்ள பெண்களுக்கு எலும்பு முறிவு, எலும்புப்புரை ஆகியவை ஏற்படாமல் தடுக்கும். இந்த தோலில், டானின்கள், பாலிஃபினால்கள் மற்றும் ஃப்ளேவனாய்ட்கள் உள்ளது. இதை உணவுடன் எடுத்துக்கொள்ளும்போது, எலும்பு ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.

pixa bay

நச்சு நிறைந்த சுற்றுச்சூழல் மாசுக்கள் மற்றும் சூரியனால் ஏற்படும் சேதங்கள்தான் வயோதிகம் முன்கூட்டியே ஏற்படுவதற்கு காரணமாகும். மாதுளை பழத்தோலின் சாறை விதை எண்ணெயில் சேர்த்து கலக்கும்போது, அது புரோகொலாஜென் சின்தசிஸ்களை மேம்படுத்துகிறது. இது கொலாஜென்களை உடையச்செய்யும் எண்சைம்களை எதிர்த்து போராடுகிறது. சரும செல்களின் வளர்ச்சியை அதிகரிக்கிறது. இதனால் சருமத்தில் வயோதிகம் தாமதமாகிறது மற்றும் சுருக்கங்கள் மற்றும் கோடுகள் மறைகிறது.

pixa bay

மாதுளை பழத்தின் தோல், சளி, இருமலைப் போக்கும் மருந்தாக பாரம்பரிய மருத்துவத்தில் இருந்துள்ளது. தொண்டை கரகரப்பை போக்க மாதுளை தோலின் பொடியை வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து வாய் கொப்பளிக்க வேண்டும். மாதுளை பழத்தோலின் ஆன்டிபாக்டீரியல் குணங்கள், தொண்டை கரகரப்பு மற்றும் இருமலை சரிசெய்கிறது.

pixa bay

வெள்ளரிக்காய் சாப்பிட்டால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் விரைவில் குறையும் எனக் கூறப்படுகிறது

pixabay