அட மாதுளையில் இத்தனை அற்புதமான மருத்துவ குணங்களா!

pixa bay

By Pandeeswari Gurusamy
Sep 09, 2024

Hindustan Times
Tamil

மாதுளையில் நிறைந்திருக்கும் அற்புதமான மருத்துவ குணங்கள் குறித்து இங்கு அறிந்து கொள்வோம்.

pixa bay

மாதுளைப் பழத்தில் அதிகளவு ஊட்டச் சத்து நிறைந்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதை சாப்பிடலாம். குழந்தைகளுக்கு தயிர் சாதம் செய்து தருகையில் அதில் மாதுளை முத்துக்களை சேர்த்துத் தந்தால் சுவையாக இருக்கும். விரும்பிச் சாப்பிடுவர். மாதுளைப் பழத்தில் உள்ள துவர்ப்பும் இனிப்பும் உடல் நலத்துக்கு நல்லது.

pixa bay

15 கிராம் அளவு மாதுளம் பிஞ்சை எடுத்து அரைத்து 200 மிலி மோரில் மூன்று வேளை வீதம் பருகிவர பேதி இரத்தப்பேதி நிற்கும்.

pixa bay

வாய்ப்புண் குணமாக இதன் தளிரை தேவைக்கேற்ப மென்று தின்ன குணமாகும்.

pixa bay

மாதுளம் பிஞ்சு தளிர் இவைகளை 20 கிராம் அளவு எடுத்து நன்கு அரைத்து பாலில் மூன்று வேளை வீதம் உண்டுவர மேகநோய், வெள்ளைப்படுதல் நிற்கும்.

pixa bay

இதன் பழ-ஓட்டைப் பொடித்து அதனுடன் வெந்தயம் பொடி சமபங்கு சேர்த்து 5-8 கிராம் வரை தினமும் 3 வேளை வீதம் உண்டுவர மேகநோய், அடிக்கடி சிறுநீர் செல்லுதல் ஆகியவை குணமாகும்.

pixa bay

புத்தாண்டில் கோடிகளை குவிக்க போகும் ரிஷபம் ராசி!’ 2025ஆம் ஆண்டுக்கான புத்தாண்டு ராசிபலன்கள்!