’சட்டப் பேரவையில் இருந்து தூக்கி எறியப்பட்ட எம்.எல்.ஏக்கள்!’ நடந்தது என்ன? புகைப்படத் தொகுப்பு!
’சட்டப் பேரவையில் இருந்து தூக்கி எறியப்பட்ட எம்.எல்.ஏக்கள்!’ நடந்தது என்ன? புகைப்படத் தொகுப்பு!
By Kathiravan V Jun 21, 2024
Hindustan Times Tamil
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் தொடர்பாக முதலில் விவாதம் நடத்தக் கோரி அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் பருகியதில் அரசின் கணக்கின் படி இதுவரை 48 பேர் உயிரிழந்து உள்ளனர். (PTI)
இறந்தவர்களின் உடல்கள் நேற்றைய தினம் அடக்கம் செய்யப்பட்ட நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். (AFP)
இன்று காலை தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்திற்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கேள்வி நேரத்துடன் தொடங்கியபோது, கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக விவாதம் நடத்தக்கோரி அதிமுக எம்,எல்.ஏக்கள் கோஷம் எழுப்பினர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக்கோரி பதாகைகளை ஏந்தி முழக்கமிட்ட நிலையில், சபாநாயகர் அப்பாவு உத்தரவுக்கு இணங்க அதிமுக எம்.எல்.ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். (எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயக்குமார் குண்டுக்கடாக வெளியேற்றப்படும் காட்சி)
பின்னர் சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நடந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என கோரினார்.