நேற்றைய தினம் (20 -04-2025) அமீர் - பாவனி திருமணம் கோலகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்ற அமீரின் தாயார் மற்றும் சகோதரி பேசியவற்றை இங்கே பார்க்கலாம்.

By Kalyani Pandiyan S
Apr 21, 2025

Hindustan Times
Tamil

பாவனி அம்மா பேசும் போது, ‘அமீர் மிகவும் நல்ல பையன். அவனை பாவனி திருமணம் செய்து கொள்வதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. 

அமீர் எனக்கும் மிகுந்த மரியாதை கொடுக்கிறான். என்னை அம்மா என்று அழைக்கிறான். அவனை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அவர்கள் நன்றாக வாழ வேண்டும்’ என்றார்.

அவருடைய சகோதரி பேசும் போது, ‘எல்லோரையும் விட நாங்கள்தான் இந்த நாளுக்காக மிகவும் எதிர்பார்ப்போடு காத்திருந்தோம். பாவனி கஷ்டப்படுவதை நாங்கள் கண்கூடாக பார்த்திருக்கிறோம். 

அவளுடைய எல்லா கஷ்ட நஷ்டங்களிலும் அமீர் பாவனியை சரியாக பார்த்துக்கொள்வான் என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை.

பாவனிக்கு அமீர் கிடைத்தது அவளுக்கு ஆசீர்வாதம். அவர் எனக்கும் ஒரு தம்பியாகி விட்டார். அமீருக்கு பொறுமை மிக மிக அதிகம். 

பாவனி ஏதாவது ஒரு பிரச்சனையின் காரணமாக மன அழுத்தத்தில் இருந்தால் என்றால், அமீர் அவளை ஒரு குழந்தை போல நடத்துவான்..

அவளுக்கு பிரச்சினையை புரியவைப்பான். அவளுக்கு நல்ல வழிகாட்டியாக இருந்து வழி நடத்துவான்’ என்று பேசினார். 

குரு மிதுன ராசியில் நுழைந்து கொடுமையான பலன்களை கொடுக்கும் ராசிகள் 

Canva