Parenting Tips : ‘இது கத்தியில் நடந்திடும் பருவம்’ டீன் ஏஜ் பருவ குழந்தைகளை கையாள்வது எப்படி? இதோ வழிகாட்டி!

By Priyadarshini R
Jul 26, 2024

Hindustan Times
Tamil

உங்கள் டீன்ஏஜ் குழந்தைகளுக்கு அவர்களின் உடலை எப்படி கவனித்துக்கொள்வது என கற்றுக்கொடுங்கள். 

தங்களை பராமரித்துக்கொள்வது எவ்வளவு நல்லது என்பதை அவர்களுக்கு எடுத்துக் கூறுங்கள். 

அவர்களுக்கு சில விதிகளை விதிப்பதைவிட அவர்களிடம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு, உடற்பயிற்சி மற்றும் உறக்கம் ஆகியவை குறித்து பேசுவது நல்லது.

ஊட்டச்சத்து உணவுகள் உட்கொள்ள அறிவுறுத்துங்கள்

உங்கள் டீன்ஏஜ் குழந்தைகளுக்கு சத்தான ஆரோக்கிய உணவுகள் மிகவும் அவசியம். 

அது அவர்களின் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் மினரல்களை கிடைக்கச் செய்கிறது. 

உணவில் இருந்து அவர்களுக்கு ஆரோக்கியம் கிடைக்கவேண்டும்.

டீன் ஏஜ் வயதினர் அவர்களின் வயது, எடை மற்றும் உயரத்துக்கு ஏற்ப கலோரிகள் எடுத்துக்கொள்ளவேண்டும். பொதுவாக ஆண் குழந்தைகளுக்கு 2,800 கலோரிகளும், பெண் குழந்தைகளுக்கு 2,200 கலோரிகளும் நாளொன்றுக்கு தேவை.

அவர்கள் உடல் மற்றும் மூளைக்கும் சுறுசுறுப்பு கொடுக்கும் அளவுக்கு, பழங்கள் மற்றும் காய்கறிகள் அதிகம் எடுத்துக்கொள்ள அறிவுறுத்துங்கள்.

ஹோட்டல் ஸ்டைலில் புலாவை எளிதாக செய்வது எப்படி என்பது பற்றிய குறிப்புகள்?