Parenting Tips : உங்கள் குழந்தைகளை நீங்கள் அதிகம் பாதுகாக்கும் பெற்றோராக இருந்தால் என்னவாகும் பாருங்கள்!
By Priyadarshini R Jul 21, 2024
Hindustan Times Tamil
நீங்கள் உங்கள் குழந்தைகள் மற்றும் அவர்களின் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணித்து வந்தால், அவர்களுக்கு எந்த சுதந்திரமும் கொடுக்காமல், அவர்களை வளரவிடாமல் இருக்கிறீர்கள் என்றால் நீங்கள் உங்கள் குழந்தைகளை அதிகம் பாதுகாக்கிறீர்கள் என்று பொருள்.
உங்கள் குழந்தைகளுக்கு தேவையான முடிவுகளை நீங்களே எடுத்தீர்கள் என்றால், அவர்களை சிறிய முடிவுகள் எடுப்பதற்கு கூட அனுமதிக்கவில்லையென்றால், அவர்களின் அனுபவங்களின் அடிப்படையில் அவர்களுக்கு தேவையானதை அவர்களே தேர்ந்தெடுக்க அனுமதிக்கவில்லையென்றால், நீங்கள் அவர்களை அதிகம் பாதுகாக்கிறீர்கள் என்று பொருள்.
நீங்கள் உங்கள் குழந்தையின் பாதுகாப்பு மற்றும் நலன் குறித்து அதிகம் கவலை கொள்கிறீர்கள் என்றால், தினசரியுமே நீங்கள் உங்கள் குழந்தைகள் குறித்து கவலைப்படுகிறீர்கள் என்றால், நீங்கள் உங்கள் குழந்தைகளை அதிகம் பாதுகாக்கிறீர்கள் என்று பொருள்.
உங்கள் குழந்தைகளை எவ்வித ஆபத்துக்கள் மற்றும் சவால்களையும் எதிர்கொள்ள நீங்கள் அனுமதிக்கவில்லையென்றால், நீங்கள் உங்கள் குழந்தைகளை அதிகம் பாதுகாக்கிறீர்கள் என்று பொருள். இதனால் உங்கள் குழந்தைகளின் பிரச்னைகளை தீர்க்கும் திறன் வளர்வதை நீங்களே தடுக்கிறீர்கள் என்று பொருள். இதனால் அவர்களால் பிரச்னைகளில் இருந்து மீண்டு எழ முடியாமல் போய்விடும்.
நீங்கள் உங்கள் குழந்தைகள் மற்றவர்களுடன் பேசும்போது, குறுக்கிடாதீர்கள், நண்பர்களுடான சண்டைகளில் தலையிடாதீர்கள். நட்பு அல்லது சண்டை எதுவாக இருந்தாலும், அவர்களே சுதந்திரமாக பிரச்னைகளை சரிசெய்ய அவர்களை அனுமதியுங்கள்.
நீங்கள் உங்கள் குழந்தைகள் தோல்விகளை சந்திக்கும்போது, அதற்கு அதிகப்படியாக எதிர்வினையாற்றுவது, அவர்களை தோல்விகள் மற்றும் அது கற்றுத்தரும் பாடங்களில் இருந்து, கற்பதை தடுப்பது என செய்தால், அது அவர்களை நீங்கள் அதிகம் பாதுகாக்கிறீர்கள் என்ற பொருளைத்தரும். அது அவர்களின் தன்னம்பிக்கையை மேலும் குலைக்கும்.