Parenting Tips : வேண்டாம்! இத மட்டும் செஞ்சுடாதீங்க உங்க குழந்தைகள் கிட்ட, அது அவர்களை எப்படி பாதிக்கிறது பாருங்கள்!

By Priyadarshini R
Jan 10, 2024

Hindustan Times
Tamil

பெற்றோர் கூறும் பொய்கள் குழந்தைகளின் வளர்ச்சியை பாதிக்கும்

பெற்றோராய் இருப்பது மிகவும் கடினமான ஒன்று. நேர்மையாய் இருந்து நமது குழந்தைகளை பாதுகாக்கவேண்டும். வெள்ளைப்பொய்கள் குழந்தைகளை பாதிக்காது என்று பெற்றோர் அடிக்கடி அதை சொல்லிவிடுகிறார்கள். அவர்களிடம் கூறு முடியாத உண்மைகள் மற்றும் கடினமான சூழல்கள் இதைக்கூறி தவிர்க்கிறார்கள். 

குழந்தைகள் பெற்றோரை அதிகம் நம்புவார்கள். ஏனெனில் அவர்கள் நம்பக்கூடிய நபர்களாக பெற்றோர்தான் இருப்பார்கள். இந்த நம்பிக்கை நேர்மையற்ற பெற்றோரால் குலைக்கப்படும். இளம் வயதில் குழந்தைகளுக்கு நிறைய மதிப்பீடுகளை கற்றுக்கொடுத்து நம்பிக்கையை வளர்க்க வேண்டும். 

சிறிய பொய்கள் பெரிதாக தெரியாது. அது குழந்தைகள் இந்த உலகத்தை எப்படி பார்க்கிறார்கள் என்பதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். கிறிஸ்துமஸ் தாத்தா கதைகள், அவர்களுக்கு ஏதேனும் வாங்கித்தருவேன் என்ற இதுபோன்ற பொய்கள், குழந்தைகளை குழப்புகிறது. 

திறந்த மற்றும் நேர்மையான உரையாடல் வழியாக ஒழுக்கத்தை போதிக்க வேண்டும். உண்மைக்கும், நேர்மைக்கும் பெற்றோர் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். 

பொய்களால் குழந்தைகளின் மனநிலை கடுமையாக பாதிக்கப்படும். இதனால் மனஅழுத்தம், பயம், பதற்றம் உருவாகும். குழந்தைகளிடம் ஏமாற்றத்தை உருவாக்கும்.

குடும்ப நபர்கள் அனைவரும் ஒருவருடன் ஒருவர் எவ்வித ஒளிவுமறைவுமின்றி உரையாட வேண்டும். குழந்தைகளை கேள்வி கேட்கவைத்து அவர்களுக்கு திறந்த பதில்களை கொடுத்து, அவர்களின் வயதுக்கு ஏற்ப பொறுப்புகளை அவர்களுக்கு ஒப்படைக்க வேண்டும். 

அவர்களின் கோணத்தையும் புரிந்துகொண்டு, அவர்களின் உணர்வுகளையும் அங்கீகரிக்க வேண்டும். இதனால் அவர்கள் தங்களின் யோசனைகள் மற்றும் கவலைகளை உங்களுடன் எளிதாகபுரிந்துகொள்ள முடியும்.

தினமும் வால்நட் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி பார்ப்போம்