நீங்கள் சொல்வதற்கு உங்கள் குழந்தைகள் கீழ்படியவில்லையென்றால், அவர்களிடம் நீங்கள் கத்திக்கொண்டு இருக்காமல் இதைச் செய்யுங்கள் பலன் கிட்டும். 

By Priyadarshini R
Apr 28, 2025

Hindustan Times
Tamil

அவர்களுக்கு வழிகாட்டல் கொடுப்பதற்கு முன்னர், நீங்கள் அவர்களுடன் உணர்வு ரீதியான தொடர்பில் இருக்கவேண்டும். அவர்களை தோளில் தட்டிக்கொடுங்கள். 

உங்கள் குழந்தைகளிடம் கத்திக்கொண்டே நீங்கள் அறையில் நடப்பதற்கு பதில், நீங்கள் அவர்கள் முன் மண்டியிட்டு அவர்களின் கண்களைப் பார்த்து பேசத் துவங்குங்கள்.

உங்கள் குரல் ஆத்திரம் நிறைந்ததாகவும், கடுகடுப்பானதாகவும் இருந்தால், குழந்தைகள் நீங்கள் சொல்வதைக் கேட்க மாட்டார்கள். அவர்களிடம் பொறுமையாகப் பேசுங்கள், தெளிவாகவும், இதமாகவும் பேசவேண்டும்.

உங்கள் குழந்தைகளிடம் நீண்ட மற்றும் குழப்பமான வார்த்தை மற்றும் வாக்கியங்களைப் பயன்படுத்தாதீர்கள். இதை அவர்களால் புரிந்துகொள்ள முடியாது.

உங்கள் குழந்தைகளுக்கு கட்டுப்பாடுகள் தேவை. அவர்களிடம் நீங்கள் கட்டளையிடாமல் பொறுமையாகப் பேசவேண்டும். 

குழந்தைகளுக்கு அவர்களின் எல்லைகள் என்னவென்பது தெரிந்திருக்கவேண்டும். எந்த நடத்தைகள் ஏற்றுக்கொள்ளப்படும் என்பதில் தெளிவாக இருங்கள்.

அவர்கள் நல்லவர்களாக இருக்கவேண்டும் என்று சொல்லிக்கொடுங்கள். அவர்களின் சிறிய விஷயங்களைக் கூட பாராட்டுங்கள்.

குரு மிதுன ராசியில் நுழைந்து கொடுமையான பலன்களை கொடுக்கும் ராசிகள் 

Canva