Parenting Tips : குழந்தைகள் திரையிலே மூழ்கிக்கிடக்கிறார்களா? அவர்களை விளையாட அழைத்துச் செல்வது எப்படி?

By Priyadarshini R
May 12, 2024

Hindustan Times
Tamil

படுக்கை அறை மற்றும் சாப்பிடும் அறை என வீட்டின் சில அறைகளில் டெக்னாலாஜி இல்லாத இடங்களை உருவாக்குங்கள். 

உங்கள் குழந்தைகளுடன் நேர்மையான மற்றும் அவர்களை விமர்சிக்காத உரையாடலை ஊக்கப்படுத்துங்கள். 

உங்கள் குழந்தைகளை உடற்பயிற்சி செய்ய ஊக்கப்படுத்துங்கள். இது அவர்களை திரையில் இருந்து மாற்றும். 

உங்கள் குழந்தைகள் ஆன்லைனில் என்ன பார்க்கிறார்கள் என்பதை கண்காணயுங்கள். 

நிபுணர்களின் உதவி என்பது மிகவும் அவசியமான ஒன்று. உங்கள் குழந்தையிடம் நீங்கள் ஏதேனும் குறிப்பிடும்படியான மாற்றத்தை பார்த்தீர்கள் என்றால், நிபுணர்களிடம் செல்லுங்கள்.

உங்கள் குழந்தைகள் கட்டாயம் திரையை பார்க்காமல் இருக்கவே முடியாது, எனவே உங்கள் குழந்தைகளுக்கு உகந்ததை அவர்களுக்கு பேசி புரியவைத்து, அதை மட்டும் அவர்கள் பார்ப்பதற்கு அனுமதியுங்கள்.

சமூக வலைதளம் அல்லது ஆன்லைன் உறவுகள்தான் வளரிளம் பருவத்தினர் மத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே அவர்கள் ஆன்லைனில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று அவர்களுக்கு தெரிந்திருப்பது மிகவும் அவசியம். அதையும் கற்றுக்கொடுங்கள்.

வேப்பிலை தரும் நன்மைகள்