வாழை படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. அந்த நிகழ்வில் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித் பல்வேறு விஷயங்களை பேசினார்.
By Kalyani Pandiyan S Aug 20, 2024
Hindustan Times Tamil
மாரி செல்வராஜ் மீது பொறாமை அவர் பேசும் போது, “எனக்கு மாரி செல்வராஜ் மேலிருக்கும் பொறாமையை விட, ராம்சாரின் மேல் இருக்கும் பொறாமைதான் அதிகம். காரணம் என்னவென்றால், ஒரு உதவி இயக்குநராக நாம் இருக்கும் பொழுது, நாம் எல்லாவற்றையும் வெளிப்படையாக பேசி விட முடியுமா என்ற கேள்வி இங்கு இருக்கிறது.
நான் உதவி இயக்குநராக பயணத்தை தொடங்கும் பொழுது, என்னுடைய படங்கள், என்னுடைய வாழ்க்கை பற்றித்தான் பேச வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். அப்படி இருக்கும் பொழுது இங்கிருக்கும் திரைப்படங்களைப் பற்றி விவாதிப்பது, இங்கிருக்கும் திரைப்பட மாஸ்டர்களை பற்றி பேசுவது உள்ளிட்ட இடங்களை, நான் தேடித்தேடி கண்டுபிடிக்க வேண்டிய நிலை இருந்தது.
உலகத்திரைப்படங்களில் தலித் சினிமா உலக திரைப்படங்களில் இலக்கியங்களில் தலித் சினிமாக்கள் பற்றிய வாதங்கள், பேச்சுக்கள் இருந்தன. ஆனால், தமிழ் சினிமாவில் இருந்ததா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். என்னுடைய முதல் படத்திற்கான ஸ்கிரிப்ட்டை எழுதும் பொழுது அதில் அம்பேத்கர் ஜெயந்தியை கொண்டாடுவது போன்ற காட்சி ஒன்றை எழுதி இருந்தேன்.
அதை படித்தவர்கள் நீங்கள் அந்த பக்கத்தை மட்டும் கிழித்துப் போட்டு விடுங்கள். இங்கு இருக்கும் தயாரிப்பாளர்கள் அதை அனுமதிக்க மாட்டார்கள் என்று என்னிடம் கூறினார்கள். அதனால் தான் நான் மிகவும் பிரபலமான தயாரிப்பாளர்கள் யாரிடமும் செல்லவே இல்லை. அதனால்தான் நான் எந்த ஒரு பிரபலமான ஹீரோவிடமும் செல்லவில்லை." என்று பேசினார்.
கார்களி ஒளிந்து கொள்ளும் எலிகளை விரட்டுவதற்கான எளிய வழிகளை பார்க்கலாம்காரில் உள்ள எலிகளை விரட்ட எளிய வழி