மது அருந்துவதால் ஆண்டுதோறும் உயிரிழப்பது எத்தனை லட்சம் பேர்?

By Karthikeyan S
Jun 26, 2024

Hindustan Times
Tamil

'மது, உடல்நலம் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் உடல் கோளாறுகள்' என்ற பெயரில் உலக சுகாதார அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், மது அருந்துவதால் மட்டும் உலக முழுவதும் ஆண்டுதோறும் 26 லட்சம் பேர் மரணமடைவதாகவும், அதில் 24 லட்சம் பேர் ஆண்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகில் ஆண்டுதோறும் உயிரிழக்கும் மக்களில் 4.7 சதவீதம் பேர் மதுவால் இறப்பதாகவும், அதில் 6 லட்சம் பேர் மற்ற போதைப் பொருள்களால் இறப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு லிட்டர் மது அருந்துவதால் ஏற்படும் இறப்பு விகிதம் என்பது குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் அதிகமாகவும், அதிக வருமானம் உள்ள நாடுகளில் குறைவாகவும் உள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

2019 ஆம் ஆண்டில் ஆல்கஹால் காரணமாக ஏற்பட்ட மொத்த  இறப்புகளில், 16 லட்சம் இறப்புகள் தொற்றாத நோய்களால் ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 4,74,000 இறப்புகள் இருதய நோய்களாலும், 4,01,000 மரணங்கள் புற்றுநோயாலும் ஏற்பட்டுள்ளது.

மது அருந்துவதால் 20 லட்சம் ஆண்களும் கஞ்சாவினால் 4 லட்சம் ஆண்களும் ஒவ்வொரு வருடமும் உயிரிழக்கின்றனர்.

மதுவால் ஏற்படும் மரணங்களில் 20 முதல் 39 வயதுடையவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பப்பாளியை உங்கள் சருமத்தில் நேரடியாக பயன்படுத்துவதால் நிகழும் மாற்றங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்