Nuts and Seeds : டாக்டருக்கு குட்பை சொல்ல ஆசையா.. தினம் கொஞ்சம் நட்ஸ் எடுத்தால் போதுமே.. !
pixa bay
By Pandeeswari Gurusamy Jan 22, 2024
Hindustan Times Tamil
சிறிய விதைகளும், நட்ஸ்களும் உங்கள் உடலுக்கு எண்ணற்ற ஆரோக்கியத்தை அள்ளி வழங்குகின்றன. அதில் உள்ள அதிகப்படியான நன்மைகளை தெரிந்துகொள்ளலாம்.
pixa bay
ஹார்வர்டு ஆராய்ச்சிகளின் ஆராய்ச்சியில், தினமும் 28 கிராம் நட்ஸ்களை சாப்பிட்டாலே 21 சதவீதம் இதய கோளாறுகள் ஏற்படுவதை அது தடுக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே ஒரே ஒரு கைப்பிடியளவு நட்ஸ் எடுத்து உங்கள் இதய ஆரோக்கியத்தை பாதுகாத்துக்கொள்ளுங்கள்.
pixa bay
உங்கள் உணவில் நட்ஸ் சேர்த்துக்கொள்வது எடையை சரியாக பராமரிக்க உதவுகிறது. இதை சாப்பிடும்போது வயிறு நிறைந்த உணர்வைக் கொடுக்கும். அதனால் அடிக்கடி பசியை ஏற்படுத்தி, ஏதேனும் சாப்பிடவேண்டும் என்ற உணர்வை கொடுக்காது. இதனால் குறைவாகவே சாப்பிட முடியும். அதிகம் சாப்பிட்டு உடல் எடையை அதிகரிக்கச் செய்யாது
pixa bay
நட்ஸ்கள் மற்றும் விதைகள், ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. சாப்பிடாமல் இருக்கும்போது, ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை அதிகரிக்கிறது. கிளைசமிக்கை கட்டுப்படுத்துகிறது. இன்சுலின் உணர்திறனாகிறது. அது உங்கள் இனிப்பு சாப்பிடும் ஆசையை கட்டுப்படுத்துகிறது. எனவே தினமும் ஒரு கைப்பிடியளவு நட்ஸ் எடுத்துக்கொள்ளுங்கள்.
pixa bay
உங்கள் உணவில் நட்ஸ்களை சேர்த்துக்கொள்வதால், வயிறு நிறைந்த உணர்வைக்கொடுக்கிறது. நட்ஸ்கள், உடல் எடையை கட்டுப்படுத்துகிறது மற்றும் உடலில் சக்தியை சமப்படுத்துகிறது. வயிறு நிறைந்த திருப்தியை நட்ஸ்கள் கொடுக்கிறது. பசியை குறைக்கிறது. இது ஒரு சிறந்த மற்றும் ஆரோக்கியமான ஸ்னாக் ஆகிறது.
pixa bay
நட்ஸ்கள் மற்றும் விதைகள் ஊட்டச்சத்துக்களின் சுரங்கம் என்றுதான் கூறவேண்டும். இது புரதச்சத்துக்கள், நார்ச்சத்துக்கள், ஆரோக்கிய கொழுப்புகள், வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்தது. இவை உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் வழங்குகின்றன.
pixa bay
ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால் உங்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. ஆரோக்கியத்தை வழங்கும் இதில், ஒட்டுமொத்த உடல் நலனுக்கும் நன்மைகிடைப்பதுடன், மன அழுத்தத்தையும் போக்குகிறது.
pixa bay
உடலில் உள்ள கொழுப்பை குறைப்பதன் மூலம் உங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே இதய நோய்களை தவிர்க்க நட்ஸ்களை உங்களின் வழக்கமான உணவாக எடுத்துக்கொள்ளுங்கள்.
pixa bay
நல்ல கொழுப்பு குறித்து மகிழ்ச்சி கொள்ளுங்கள். நட்ஸ்களில் மோனோசேச்சுரேடட் மற்றும் பாலிசேச்சுரேடட் கொழுப்புகள் நிறைந்துள்ளது. இவை இதயத்திற்கு இதமானது. எனவே நீங்கள் ஸ்னாக்ஸாக உடலுக்கு கேடு விளைவிக்கும் கொழுப்புகள் நிறைந்த உணவை எடுத்துக்கொள்ளாமல் இதை எடுத்துக்கொள்வது உடலுக்கு நல்லது.
pixa bay
முக்கிய வைட்டமின்களும், மினரல்களும் நட்ஸ் மற்றும் விதைகளில் அதிகளவு உள்ளது. எனவே இதை கட்டாயம் உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். வைட்டமின் ஈ முதல் வைட்டமின் பி6 மற்றும் நியாசின் வரையும், ஃபோலேட், மெக்னீசியம், சிங்க் மற்றும் பொட்டாசிய சத்தும் நிறைந்துள்ளது. இந்த ஸ்னாக்ஸ்களில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. உங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து தேவையை பூர்த்தி செய்கிறது.