நெல்லிக்காய் குடலியக்கத்தை சீராக வைக்கும், எனவே நெல்லிக்காய் சாற்றைத் தினமும் குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்னை தீரும்
கால்சியம், புரதம் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்திருப்பதால் நெல்லிக்காயைக் கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
நெல்லிக்காயில் வைட்டமின் சி, டானின்கள், அமினோ அமிலங்கள் மற்றும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அவை முடிக்கு ஊட்டமளிக்கும் நன்மைகளை வழங்குகின்றன.
நெல்லிக்காயில் உள்ள எலாகிடானின்கள் சேர்மங்கள் இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைக்கவும் நீரழிவு நோயைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
நெல்லிக்காய் பொடி மற்றும் தயிர் கலந்து வாரத்திற்கு இருமுறை பேசியல் செய்யும் போது முகத்தில் உள்ள தேவையற்ற செல்கள் அழித்து சருமம் பளபளப்பாகும்.
நெல்லிக்காயில் கால்சியம் சத்து நிறைந்து இருப்பதால் எலும்புகளின் உறுதிக்கு பயன்படுகிறது.