உங்கள் டயட்டில் இந்த ஊட்டச்சத்து உணவுகளை சேர்ப்பதன் மூலம் தலைமுடி வளர்ச்சியை ஊக்குவிக்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Mar 26, 2024

Hindustan Times
Tamil

அடிப்படை ஊட்டச்சத்துகள், தாதுக்கள் அடங்கிய சமச்சீரான டயட்டை பின்பற்றுவதன் மூலம் தலை முடி வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன், முடி தொடர்பான பிரச்னைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம்

பையோடின்

பாதாம், நிலக்கடலை, வால்நட், சூர்யகாந்தி, ஆளிவிதை, மீன் போன்றவற்றில் பையோடீன் அதிகமாக உள்ளது 

துத்தநாகம்

துத்தநாகம் அதிகம் நிறைந்த விதைகள், நட்ஸ் வகைகள், மீன், சீரியல் வகை உணவுகள், முட்டை ஆகியவற்றை டயட்டில் சேர்த்து கொள்வதன் மூலம் தலை முடி வளர்ச்சியை ஊக்குவிக்கலாம்

புரதம்

பருப்பு வகைகள், சிக்கன் மார்பு, கொண்டகடலை, பால் சார்ந்த பொருள்களில் இருக்கும் புரதம் தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கிறது

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள்

சார்டைன், சாலமன், கானாங்கெழுத்தி, நட்ஸ், விதைகள் போன்றவற்றில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இவை மயிர்கால்களுக்கு ஊட்டமளிக்கிறது

வைட்டமின்கள்

பழங்கள், சிலுவை காய்கற்களான காலிபிளவர், ப்ரோக்கோலி, முட்டைகோஸ், முள்ளங்கி, புரோபயோடிக் உணவுகளில் நிறைந்திருக்கும் வைட்டமின்கள் தலைமுடி வளர்ச்சிக்கு உதவுவதுடன் முடிகள் சேதமடைவதை தடுக்கிறது 

பாலைத் தவிர கால்சியம் சத்து நிறைந்துள்ள பொருட்கள்!

Pexels