லட்சுமி தேவிக்கு இந்த தேதியில் பிறந்தவர்களை ரொம்ப பிடிக்கும்!

By Kathiravan V
Aug 15, 2024

Hindustan Times
Tamil

செல்வத்தின் அடையாளமாக கருதப்படும் லட்சுமி தேவியின் வருகை ஆனது வீட்டில் வறுமை, துக்கம் மற்றும் துன்பம் ஆகியவற்றை அகற்றி மகிழ்ச்சியை தரும் நிலையை ஏற்படுத்தும். லட்சுமி தேவியை வழிபடுவதன் மூலம், செல்வம், அதிர்ஷ்டம், நல்ல ஆரோக்கியம், செழிப்பு மற்றும் மகிழ்ச்சி ஆகியவற்றைப் பெறலாம் என்று நம்பப்படுகிறது. வணிகர்கள், தொழில்முனைவோர் மற்றும் பொருளாதார நிலை உயர விரும்புவோர் லட்சுமி தேவியை வழிபடுவதன் மூலம் வாழ்வில் செழுமையை அடைய முடியும்.

ஒருவரது எதிர்காலம் ஆனது ஜோதிடத்தை போலவே நியூமராலஜி எனப்படும் எண் கணிதம் மூலம் கணிக்கப்படும். ஜோதிடத்திற்கு 12 ராசிகள் இருப்பது போல எண் கணிதத்தில் 1 முதல் 9 வரையிலான எண்களின் கூட்டுத்தொகையை மைப்படுத்தி பலன்கள் கணிக்கப்படுகின்றது. காதல், தொழில், உடல்நலம், வணிகம், செல்வம், கல்வி, திருமணம் போன்றவற்றைப் பற்றி அறிய இந்த எண்கள் பயன்படுத்தப்படுகின்றன.

அதே நேரத்தில், லட்சுமி தேவியின் அருள் எப்போதும் சில குறிப்பிட்ட எண்களில் பிறந்தவர்கள் மீது இருக்கும். அத்தகையவர்கள் வாழ்க்கையில் அதிக பணப் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியதில்லை.

எண் கணிதத்தின் படி, உங்கள் பிறந்த தேதியின் கூட்டுத்தொகை மூலம் உங்களின் ரேடிக்ஸ் எண்ணைக் கண்டுபிடிக்க முடியும். உதாரணமாக நீங்கள் 3, 12, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் எனில் உங்கள் நியூமராலஜி எண் 3ஆம் எண்ணாக இருக்கும்.(freepik)

6, 14 அல்லது 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு எண் 6 எண் 6 ஆகும். எண் கணிதத்தின் படி, 6ஆம் எண்ணின் அதிபதி சுக்கிரன் ஆவார், இவர் காதல், ஆடம்பரம், செல்வம் மற்றும் அழகு ஆகியவற்றின் அடையாளமாக விளங்குகிறார்.

சுக்கிரன் பகவான், லட்சுமி தேவி உடன் தொடர்பு கொண்ட கிரகமாக உள்ளது. எண் கணிதத்தின் படி, எண் 6 லக்ஷ்மி தேவிக்கு மிகவும் பிரியமானது. எனவே, மாதத்தின் 6, 14 மற்றும் 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக கருதப்படுகிறார்கள். இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கையில் பணத்திற்கு பஞ்சமில்லை.

இது மட்டுமல்லாமல், அவர்களின் காதல் வாழ்க்கையும் மகிழ்ச்சி நிறைந்தது காணப்படும். இவர்கள் ஆடம்பர வாழ்கையை வாழ்வார்கள். இந்த எண்ணில் பிறந்தவர்கள் வாழ்நாள் முழுவதும் பணம் தொடர்பான அதிக பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியதில்லை.

மாதுளை நன்மைகள்