தலைமுடி வளர்ச்சிக்கு உதவும் அசைவ உணவுகள் எவை என்பதை பார்க்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Mar 11, 2024

Hindustan Times
Tamil

ஆரோக்கியமான டயட் முறையை பின்பற்றுவதன் மூலம் தலைமுடி வளர்ச்சியை ஊக்கப்படுத்தி அதன் ஆரோக்கியத்தை தக்க வைக்கலாம். ஊட்டச்சத்துக்கள் மிக்க சில அசைவ உணவுகளும் தலைமுடி வளர்ச்சிக்கு உதவுகிறது

மீன், சிக்கன் ஆகியவற்றில் தலைமுடி வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன

சாலமன்

ஒமேகா 3 கொழுப்பு அமிலத்தின் சிறந்த ஆதாரமாக சாலமன் மீன் உள்ளது. இவை தலைமுடியின் வேர்களுக்கு ஊட்டமளிக்கிறது. இதனால் தலைமுடி வளர்ச்சியும் மேம்படுகிறது

இறால் 

இறால்களில் வைட்டமின் பி12, இரும்புச்சத்து, துத்தநாகம் நிறைந்துள்ளது. இவை வேர்களை வலுப்படுத்தி, மயிர்கால்களுக்கு ஊட்டமளித்து தலைமுடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது

முட்டை

புரதம், ரிபோபிளாவின், நியாசின், பொட்டாசியம் போன்ற தாதுக்கள் நிறைந்திருக்கும் முட்டை தலைமுடி வளர்ச்சியை மேம்படுத்துகிறது

சிக்கன் மார்பு

கோழிக்கறியில் இருக்கும் மார்பு பகுதி மெலிதான புரதத்துக்கு சிறந்த சாய்ஸாக உள்ளது. இதில் இருக்கும் வைட்டமின் பி தலைமுடி உதிர்வை குறைத்து, முடி வளர்ச்சியை ஊக்கப்படுத்துகிறது

’முட்டையை ஃபிரிட்ஜில் வைத்தால் ஆபத்தா?’ எப்படி சேமித்தால் நீண்டநாட்கள் வரும்! இதோ முழு விவரம்!