வயிற்று தொந்தரவுகளை சரி செய்ய இரவில் குடிக்க வேண்டிய பானங்கள்!
By Suguna Devi P
Jan 08, 2025
Hindustan Times
Tamil
சூடான தண்ணீரில் எலுமிச்சை சாற்றை பிழிந்து குடிக்க வேண்டும். இரவில் இதனை குடிக்கும் போது வயிற்றில் உள்ள இறுக்கம் குறையும்.
ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை ஊற்றி கலக்கி குடிக்க வேண்டும். இது வயிற்று உப்பசத்தை குறைக்கும்.
பாதாம் பாலுடன் வாழைப்பழம் சேர்த்து சாப்பிட்டால் வயிற்றில் உள்ள அசிடிட்டி குறையும்.
வெது வெதுப்பான பாலில் மஞ்சள் கலந்து குடித்தால் வாயு தொல்லை நீங்கும்.
கலோரிகள் குறைவாக இருப்பதாக உணர்ந்தால் தேங்காய் தண்ணீர் அல்லது இளநீர் குடிக்க வேண்டும்.
இரவு உணவிற்கு பின் இஞ்சி டீ குடித்தால் செரிமான தொந்தரவு குறையும்.
சூடான தண்ணீரில் தேன் கலந்து குடித்தால் நன்மை கிடைக்கும்.
உங்கள் முகத்தில் பருக்கள் வருகிறதா? இந்த உதவிக்குறிப்புகளைப் பின்பற்றவும்!
pexels
க்ளிக் செய்யவும்