பில்லா திரைப்படத்தின் போது தனக்கும், நமீதாவிற்கும் இடையே நடந்த மோதல் குறித்து நயன்தாராவே பல வருடங்களுக்கு முன்னதாக விஜய் டிவிக்கு கொடுத்த பேட்டியில் பேசி இருந்தார். அந்த பேட்டி இங்கே!
By Kalyani Pandiyan S Nov 19, 2024
Hindustan Times Tamil
இது குறித்து அவர் பேசும் போது, “பில்லா திரைப்படத்தின் போது, ஆரம்பத்தில் நமீதாவுக்கும், எனக்குமான உறவு நன்றாகவே இருந்தது. முதலில் நானாகத்தான் அவரிடம் சென்று பேசினேன்.இருவரும் நன்றாகத்தான் பேசிக்கொண்டிருந்தோம். பழகிக்கொண்டிருந்தோம். முதல் சில நாட்கள் அப்படித்தான் போகும் என்று எனக்குத்தெரியும்.
திடீரென்று ஒரு நாள் என்னுடன் அவர் பேசுவதை நிறுத்திவிட்டார். இதற்கும், எனக்கும் அவருக்கும் பெரிதாக எந்த பிரச்சினையோ, சண்டையோ நடக்கவே இல்லை.. வருவார்.. கூட்டத்தில் இருக்கும் எல்லோருக்கும் ஹாய் சொல்வார்.. எனக்கு மட்டும் சொல்லமாட்டார்.
ஒரு கட்டத்தில் எனக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. ஒரு கட்டத்தில் அதை நான் அப்படியே விட்டு விட்டேன். அவருடன் பேசுவதையும் நிறுத்திக்கொண்டேன். மற்றவர்களுக்கு நம்முடன் பிரச்சினை இருக்கும் பட்சத்தில், அது அவர்களின் பிரச்சினையாக மாறி விடுகிறது. ஆகையால் அதைப் பற்றி பெரிதாக நாம் கவலைக்கொள்ளத் தேவையில்லை.
த்ரிஷா உடனான உறவு குறித்து நயன்தாரா பேசும் போது, “த்ரிஷா, ஸ்ரேயா உள்ளிட்டோரை நான் நண்பர்கள் என்று சொல்லமாட்டேன். காரணம், நட்பு என்பது மிகப்பெரிய வார்த்தை. அதை அவர்களுக்கு பயன்படுத்த முடியாது. எங்களுக்குள் பிரச்சினைகள் இருக்கின்றன. ஆனால் இதுதான் அந்த பிரச்சினை என்று என்னால் அப்படியே பொதுவெளியில் அப்படியே போட்டு உடைக்க முடியாது.
ஹீரோயின்கள் என்றாலே அதெல்லாம் இருக்கத்தான் செய்யும். பொதுவாக கூட சொல்வார்களே.. ஒரு பெண்ணுக்கும், இன்னொரு பெண்ணுக்கும் ஆகாது என்று.. அது போலதான். அப்படியும் அவர்களிடம் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.
ஆனால், அவர்களுக்கு என்னிடத்தில் பிரச்சினை இருக்கிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் நான் அதனை பெரிதாக கண்டுகொள்ள மாட்டேன். அதே போல பிரச்சினை இருக்கிறது என்பதற்காக நானாக சென்றெல்லாம் அவர்களிடத்தில் பேசமாட்டேன். “ என்று பேசினார்.