தலைமுடி உதிர்வுக்கு முன் இயல்பாகவே முடி வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் இயற்கையான எண்ணெய் பற்றி தெரிந்துகொள்ளலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Feb 29, 2024

Hindustan Times
Tamil

உச்சந்தலையில் இயற்கையான எண்ணெய் தேய்ப்பதால் தலைமுடி, மயிர்க்கால்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரித்து தலைமுடி வளர்ச்சியானது தூண்டப்படுகிறது

தலைமுடி உதிர்வு பிரச்னையால் அவதிப்படுபவர்கள் இந்த இயற்கையான எண்ணெய்யை தேய்ப்பதன் மூலம் தலை முடி வளர்ச்சியை ஊக்கப்படுத்தலாம்

தேங்காய் எண்ணெய்

தலைமுடி மீண்டும் வளர்வதை ஊக்குவிக்கிறது தேங்காய் எண்ணெய். இதில் வைட்டமின் ஏ, ஈ, டி, இரும்புச்சத்து நிறைந்துள்ளது. கொலஜன் உற்பத்தியை அதிகரித்து மயிர்கால்களை தூண்டுகிறது

பாதாம் எண்ணெய்

பாதாம் எண்ணெய்யில் வைட்டமின் ஈ, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. உச்சந்தலை ஆரோக்கியத்தை தக்கவைக்க உதவுவதோடு, தலைமுடி வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது

நெல்லிக்காய் எண்ணெய்

நெல்லிக்காய் எண்ணெய்யில் வைட்டமின் சி மற்றும் ஈ உள்ளது. உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, மயிர்கால்களை வலுப்படுத்தி தலைமுடி வளர்ச்சியை மேம்படுத்துகிறது  

பிரிங்ராஜ் எண்ணெய் 

மயிர்கால்களை செயல்படுத்த உதவும் பிரிங்ராஜ் எண்ணெய் தலைமுடி மீண்டும் வளர்ச்சியடைவதை ஊக்கப்படுத்துகிறது. உச்சந்தலையில் ஊட்டமளித்து பளபளப்பான மற்றும் மென்மையான முடியை வழங்க உதவுகிறது

மூட்டு வலிக்குத் தீர்வு காண உதவும் உணவுகள்