பொடுகை விரட்டும் இயற்கையான ஹேர் மாஸ்க்குகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Apr 19, 2024

Hindustan Times
Tamil

பொடுகு வந்தால் மயிர்கால்களில் எரிச்சல் ஏற்படுவதோடு, தலைமுடி உதிர்வும் ஏற்படுகிறது. பொடுகை விரட்டும் இயற்கையான ஹேர் மாஸ்க்குகள் பற்றி பார்க்கலாம்

ஆப்பிள் சீடர் வினிகர்

ஒரு பவுல் தண்ணீரில், டேபிள் ஸ்பூன் அளவு ஆப்பிள் சீடர் வினிகரை சேர்த்து, அதில் மூன்று துளிகள் டீ ட்ரீ எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் அல்லது தலைக்கு உபயோகிக்கும் எண்ணெய்யை சேர்க்க வேண்டும். இந்த கலவையை தலைமுடியில் தேய்த்து 25 நிமிடங்கள் வரை அப்படியே விட்டுவிட வேண்டும். பின்னர் தலைமுடியை ஷாம்பூவை வைத்து கழுவ வேண்டும்

முட்டை மற்றும் ஆலிவ் எண்ணெய்

ஒரு பவுலில் இரண்டு முட்டைகளை உடைத்து, அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் சேர்க்க வேண்டும். இந்த கலவையை தலைமுடியிலும்,  மயிர்கால்களிலும்  தேய்த்து 15 நிமிடம் கழித்து மென்மையான ஷாம்பூவான அலச வேண்டும்

கற்றாழை ஜெல் மற்றும் ஆலிவ் எண்ணெய்

ஒரு பவுலில் கற்றாழை ஜெல் எடுத்து அதில் டேபிள் ஸ்பூன் அளவு ஆலிவ் எண்ணெய் சேர்க்க வேண்டும். இந்த கலவையை தலையில் தேய்த்து மசாஜ் செய்த பின்னர் 30 நிமிடம் கழித்து மென்மையான ஷாம்பூவால் கழுவ வேண்டும்

வாழைப்பழம் மற்றும் தேங்காய் எண்ணெய்

பெரிய பவுலில் இரண்டு வாழைப்பழத்தை எடுத்து நன்கு குலைத்த பின்னர் அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து இந்த கலவையை தலைமுடி மற்றும் மயிர்கால்களில் தேய்த்து 20 நிமிடம் கழித்து மென்மையான ஷாம்பூவால் கழுவ வேண்டும் 

தயிர் மற்றும் எலுமிச்சை ஹேர் மாஸ்க்

ஒரு கப்பில் அரை எலுமிச்சை எடுத்து பிழிந்து அந்த சாறுடன் தயிர் சேர்த்து  தலைமுடியில் தேய்க்க வேண்டும். 40  நிமிடங்கள் கழித்து அதை ஷாம்பூவால் கழுவ வேண்டும்

சொரியாஸிஸை குணப்படுத்த உதவும் காய் கோவைக்காய்