உங்கள் வீட்டு கிச்சனில் இருக்கும் இயற்கையான ஆன்டிபயோடிக்குகள் பற்றி தெரியுமா?

By Muthu Vinayagam Kosalairaman
Aug 20, 2024

Hindustan Times
Tamil

உடல்நிலை சரியில்லாமல் போனல் நாம் எடுத்துக்கொள்ளும் மருந்துகளில் பிரதானமானவை ஆக ஆன்டிபயோடிக்குகள் இருக்கின்றன

இயற்கை சேர்மங்கள் சில பாக்டீரியாவுக்கு எதிராக புதிய நுண்ணுயிர் எதிர்ப்பிகளான ஆன்டிபயோடிக்குகளை வழங்க  வழங்க முடியும் என பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன

இஞ்சி சிறந்த இயற்கை ஆன்டிபயோடிக் பண்புகளை கொண்டதாக உள்ளது. அத்துடன் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வீக்கத்துக்கு எதிரான பண்புகள், ரத்த உறைவு எதிர்ப்பு மருந்தாக செயல்படுகிறது

பூண்டில் இருக்கும் அலிசின், அஜோனிஸ், அலைல் சல்பைட்ஸ் போன்ற சேர்மங்கள் பல்வேறு பாக்டீரியாவுக்கு எதிரான பண்புகளை கொண்டுள்ளது

காயத்தை ஆற்றுப்படுத்தும் தன்மை, பாக்டீரியாவுக்கு எதிரான பண்புகள் தேனில் இருக்கிறது. பண்டைய காலம் முதல் பயன்படுத்தப்பட்டு வருவதுடன் மருந்து எதிர்ப்பு பாக்டீரியாவை எதிர்த்து போராடுகிறது

கிராம்பு உள்ள பண்புகள் இயற்கையாக பாக்டீரியா எதிர்க்கும் தன்மை கொண்டிருப்பதாக பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன

கற்பூரவள்ளி இலைகள் நோய் எதிர்ப்பு அமைப்பை மேம்படுத்தி, ஆன்டிஆக்ஸிடன்ட் நன்மைகள் தருகிறது. கூடுதலாக இதில் ஆன்டிபயோடிக் பண்புகள் உள்ளன

வெள்ளரி நன்மைகள்