பளபளவென மின்னும் விதமாக வெள்ளையான பற்களை பெற வீட்டில் இருந்தபடியே பின்பற்ற வேண்டிய டிப்ஸ்களை பார்க்கலாம்
By Muthu Vinayagam Kosalairaman Jul 10, 2024
Hindustan Times Tamil
இயற்கையான முறையில் பற்களை வெண்மையாக்க பல்வேறு வழிகள் இருக்கின்றன. பேஸ்ட், டூத் க்ளீனர் உள்பட ரசாயண பயன்பாட்டை காட்டிலும் இயற்கை முறை மிகவும் பாதுகாப்பானது
பழங்காலத்தில் இருந்து பயன்படுத்தப்படும் ஆயில் புல்லிங், பற்களை இயற்கையான முறையில் வெண்மையாக்க உதவுகிறது
ஆயில் புல்லிங் செய்வதனால் வாய்வழி சுகாதாரம் பேனி பாதுகாக்கப்படுவதுடன், நச்சுக்களையும் நீக்க உதவுகிறது. அத்துடன் பற்களின் நிறத்தை மங்க செய்யும் பாக்டீரியாக்களை நீக்குகிறது
இயற்கையாக வெண்மையை தரும் தன்மை பேக்கிங் சோடாவுக்கு உள்ளது. வாயில் அல்கலைன், அதாவது காரத்தன்மை உருவாக்கி பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தடுக்கிறது. எனவே பேக்கிங் சோடாவை வைத்து பற்களை சுத்தம் செய்யலாம்
இயற்கையான பிளீச்சிங்காக செயல்படும் ஹைட்ரோஜன் பெராக்ஸைடு வாய் பகுதியில் இருக்கும் பாக்டீரியாக்களை அழிக்கிறது
பல்லிடுக்குகளில் நூல்கள் பயன்படுத்தி சுத்தம் செய்தலை பின்பற்ற வேண்டும். இவ்வாறு செய்வதால் வாய் பகுதியில் பாக்டீரியா வளர்ச்சி குறைக்கப்பட்டு, பிளேக் போன்ற பாதிப்பு ஏற்படுவது தடுக்கப்படுகிறது
அதிகப்படியான காய்கறிகள், பழங்கள் சாப்பிடுவது உடலுக்கும், பற்கள் ஆரோக்கியத்துக்கு நன்மை தருகிறது. நன்கு மென்று சாப்பிடுவதால் அவற்றில் இருந்து கிடைக்கும் சத்துகள் பற்களில் பிளேக் உருவாவதை தடுக்கிறது
Vastu Tips: வீட்டிற்குள் படிக்கட்டுகள் கட்டுவது சரியா, தவறா?