ஜனவரி மாதம் ட்ரீப் போக முடிவு செய்துள்ளீர்ளா? இந்த காலத்தில் இந்தியாவில் எங்கெல்லாம் சுற்றி பார்க்கலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Jan 06, 2024

Hindustan Times
Tamil

கடற்கரை,  மலைப்பிரதேசம், ஆன்மிக பயணம் என ஜனவரி மாதத்தில் செல்லக்கூடிய ஏரளாமான பகுதிகள் உள்ளன

உதய்ப்பூர், ராஜஸ்தான்

கண்கவரும் பேலஸ்கள், கோயிகள், பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் மிக்க இடங்களை கொண்ட உதய்ப்பூரில் இந்த காலத்தில் பிச்சலோ ஏரி கரையில் இருந்தவாறு சூரிய அஸ்தமனத்தை கண்டு ரசிக்கலாம்

மணாலி, இமாச்சல பிரதேசம்

பனியால் போர்த்தப்பட்ட மலைதொடர்கள் கொண்டிருக்கும் மணாலியின் அழகை கண்டுகளிக்க இரு கண்கள் போதாது என்றே கூறலாம். ஜனவரியில் பயணம் மேற்கொள்ள சிறந்த இடம் இது

கோவா

துடிப்பான  கலாச்சாரம் மிக்க கோவாவில் இரவு பொழுதுகள் கிளப், அழகிய கடற்கரைகள் என இதமான காலநிலையில் பொழுதை கழிக்கலாம்

வாரணாசி, உத்தர பிரதேசம்

ஆன்மிக நகரமான இங்கு கங்கை நதிக்கரையில் கோயிலில் தரிசனம் செய்து மனதை அமைதிபடுத்தலாம்.  ஆன்மிக பயணம் செய்ய விரும்புவோர் இந்த காலத்தில் இங்கு  செல்லலாம்

வயநாடு, கேரளா

மலைப்பிரதேசமான வயநாட்டில் குளிர்ச்சியான காலநிலையில் பச்சை பசேல் டீ எஸ்டேட், அடர்ந்த காடுகளின் அழகை கண்டு ரசிக்கலாம்

30 வயது அடைந்துவிட்டால் உடலுக்கு தேவையான அடிப்படை ஊட்டச்சத்துகள் எவை என்பதை பார்க்கலாம்