‘அரசு வேலை முதல் ஆட்சி அதிகாரம் வரை!’ முத்திரை பதிக்கும் முத்திரிகா யோகம் யாருக்கு?
By Kathiravan V Feb 12, 2024
Hindustan Times Tamil
ஜோதிடத்தில் யோகம் என்ற சொல்லுக்கு சேர்க்கை என்று பொருள் படுகிறது என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
கையெழுத்து இடும் அதிகாரம், முத்திரைப்பதிக்கும் அதிகாரம் என்பது அரசுப்பணியாளர்களுக்கு கிடைக்கும் கௌரவமாக உள்ளது.
பதவி, அதிகாரம், அந்தஸ்தில் அமர வைக்கும் அமைப்பை இந்த முத்திரிகா யோகம் கொடுக்க வல்லது என ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகிறது. கிராமங்களை நிர்வகிக்கும் விஏஓ தொடங்கி நாட்டை ஆளும் ஜனாதிபதி வரை சீல் வைத்து கையொப்பம் இடும் அதிகாரம் உள்ளது.
சந்திரன், புதன், சுக்கிரன், குரு ஆகிய சுப கிரகங்களில் புதனை தவிர்த்து சந்திரன், சுக்கிரன், குரு ஆகிய கிரகங்கள் ஒருவரது ஜாதகத்தில் மறைவு ஸ்தானம் எனப்படும் 6, 8, 12 என்ற மறைவு ஸ்தானங்களில் இல்லாமல், இணைந்த நிலையில் அல்லது ஒருவருக்கொருவர் கேந்திர திரிகோண நிலைகளில் அமர்ந்து யாரேனும் ஒருவர் ஆட்சி பெற்று இருந்தால் முத்திரிகா யோகம் ஏற்படும்.
முத்திரிகா யோகம் ஒருவருக்கு நிரந்தர அதிகார பதவிகளையோ அல்லது தற்காலிக அதிகார பதவிகளையோ கொடுக்கவல்லது
முத்திரிகா யோகத்தால் ஒருவருக்கு செல்வம், செல்வாக்கு, மற்றும் புகழ் கூடும். ஆட்சி அதிகாரத்திலோ அல்லது அரசு பதவிகளிலோ நிரந்தர பதவிகளோ அல்லது தற்காலிக பதவிகளோ கிடைக்கும்.
இந்த யோகம் கொண்ட ஜாதகர் தன்னம்பிக்கை மற்றும் தைரியம் கொண்டவராக இருப்பார். எந்த ஒரு செயலையும் துவங்கி வெற்றிகரமாக முடிப்பார். சமூகத்தில் மதிக்கத்தக்க நபராக மாறும் இவர்களுக்கு, அரசாங்கம் அல்லது பெரிய நிறுவனங்களில் செல்வாக்குள்ள பதவிகளில் அமர முடியும்
முத்திரிகா யோகம் ஒரு சிறப்பு யோகம் என சொல்லப்பட்டாலும், ஜாதகத்தில் மற்ற கிரகங்களின் நிலை மற்றும் தசா புத்தி பலன்களையும் பொறுத்து ஜாதகரின் வாழ்க்கை அமையும். எனவே உங்கள் சொந்த ஜாதகத்தை காட்டி ஜோதிடர் ஒருவரின் ஆலோசனைகளை பெற்று செயல்படுவது நன்மை தரும்
2கே கிட்ஸ்களை கவர்ந்தாரா ரஜினி? அவரின் கடைசி 10 படங்கள் என்ன?