தமிழ் ரசிகர்களையும் கடந்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் சீக்வெல் கோலிவுட் படங்கள் எவை என்பதை பார்க்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Aug 12, 2024

Hindustan Times
Tamil

உலகநாயகன் கமல்ஹாசன் - பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் இந்தியன் 2 வரவேற்பை பெறாமல் போனாலும் இந்தியன் 3 ரசிகர்களை எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என நம்பப்படுகிறது. இந்த படம் 2025இல் ரிலீசாகும் என தெரிகிறது

சிவகார்த்திகேயன் நடிப்பில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கவர்ந்த சயின்ஸ் பிக்சன் படமான அயலான படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக உள்ளது. இந்த படம் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

கார்த்தி நடித்த ஸ்பை த்ரில்லர் படமான சர்தார் இரண்டாம் பாகம் ஷுட்டிங் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் அடுத்த ஆண்டில் வெளியாகவுள்ளது

அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து தமிழ் சினிமாவின் ட்ரெண்ட் செட்டர் திரைப்படமாக அமைந்த தனி ஒருவன் இரண்டாம் பாகம் படம் எம். மோகன் ராஜா இயக்கத்தின் உருவாகி வருகிறது. ஜெயம் ரவி, நயன்தாரா நடிக்க முதல் பாகத்தில் அரவிந்த் சாமி போல் இந்த பாகத்தில் யார் ஸ்டைலிஷ் வில்லனாக தோன்றவுள்ளார் என்கிற ஆவல் ரசிகர்கள் மத்தியில் உள்ளது

விஜய் சேதுபதி - மஞ்சு வாரியர் நடிக்க விடுதலை இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. விஜய சேதுபதி நடித்து வரும் பெருமாள் கதாபாத்திரத்தின் கதையின் கூறும் விதமாக இந்த பாகம் உள்ளது 

நயன்தாரா கதையின் நாயகியாக நடித்து ஹிட்டான மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகம் பற்றி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. எனவே நயன்தாரா மீண்டும்  அம்மன் அவதாரம் எடுத்து ரசிகர்களை மகிழ்விக்க உள்ளார்

கோலிவுட் சீக்வல் படங்களில் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக கார்த்தி நடித்த கைதி படத்தின் இரண்டாம் பாகம் உள்ளது. தற்போது ரஜினிகாந்தின் கூலி படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ் கைதி 2 படத்துக்கான வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறாராம்

பா. ரஞ்சித் இயக்கத்தில் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற பீரியட் ஆக்சன் படமான சார்பட்டா பரம்பரை இரண்டாம் பாகம் குறித்து அறிவிக்கப்பட்ட அதந் வேலைகளும் நடைபெற்று வருகிறது. கூடிய விரைவில் இதன் அப்டேட்டும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது 

ஜெயம் ரவி அண்மையில் தன்னுடைய மனைவியை ஆர்த்தியை பிரிவதாக கூறி அறிக்கை வெளியிட்ட நிலையில், அதற்கு ஆர்த்தி தன்னுடைய பதிலை கொடுத்திருக்கிறார்.