ஐபிஎல் போட்டிகளில் கேப்டன்களின் இன்னிங்ஸ் எப்போதும் தனித்துவ கவனம் பெறும் விஷயமாகவே இருந்துள்ளது

By Muthu Vinayagam Kosalairaman
Apr 13, 2025

Hindustan Times
Tamil

ஐபிஎல் போட்டிகளில் அதிவேகமாக அரைசதமடித்த கேப்டன்கள் யார். அவர்களில் முதல் இடத்தில் இருப்பது யார் என்பதை பார்க்கலாம்

ஏப்ரல் 12ஆம் தேதி சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியில் மிரட்டிய பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 22 பந்துகளில் அரைசதமடித்தார். இந்த போட்டியில் அவர் 36 பந்துகளில் 82 ரன்கள் அடித்து மிரட்டினார்

கடந்த 2019 சீசனில் மும்பை இந்தியன்ஸ் தற்காலிக கேப்டனாக பொறுப்பு வகித்த கைரன் பொல்லார்டு, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 22 பந்துகளில் அரைசதமடித்தார். இந்த போட்டியில் 31 பந்துகளில் 83 ரன்கள் அடித்தார் பொல்லார்டு

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட தினேஷ் கார்த்திக், 2018 சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக 22 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். அரைசதமடித்த அடுத்த பந்தில் அவர் அவுட்டானார்

2016 சீசனில் சன் ரைசர்ஸ் அணியின் கேப்டனாக இருந்த அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் வார்னர், ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் 21 பந்துகளில் அரைசதமடித்தார். இந்த போட்டியில் 25 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார் வார்னர்

2012 சீசனில் உச்சகட்ட பார்மில் இருந்த தோனி, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக பெங்களுருவில் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் 20 பந்துகளில் அரைசதமடித்தார். இந்த போட்டியில் 51 ரன்கள் அடித்து அவுட்டாகாமல் இருந்தார்

2024 சீசனில் ஆர்சிபி அணியின் கேப்டனாக இருந்த டூ பிளெசிஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 18 பந்துகளில் அரைசதமடித்தார். இந்த போட்டியில் 23 பந்துகளில் 64 ரன்கள் எடுத்தார்

2009 சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற டெக்கான் சார்ஜர்ஸ் கேப்டனாக இருந்த ஆடம் கில்கிறஸ்ட் ஐபிஎல் போட்டிகளில் முதல் முறையாக அதிவேக அரைசதமடித்த கேப்டனாக உள்ளார். டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிராக 17 பந்துகளில் அரைசதமடித்த கில்கிறிஸ்ட், 35 பந்துகளில் 85 ரன்கள் அடித்தார்

ராகு பகவானின் கும்ப ராசி பயணத்தால் யோகத்தை பெற்ற ராசிகள் 

Canva