’மேஷம் முதல் மீனம் வரை!’ நவக்கிரகங்களின் மூலத்திரிகோண பலன்கள் இதோ!

By Kathiravan V
Jun 08, 2024

Hindustan Times
Tamil

ஒரு கிரகம் தனது காரகத்துவத்தை தொடர்ச்சியாக வெளிப்படுத்தும் இடமாக மூலத்திரிகோணம் உள்ளது. நவகிரகங்களின் பலமானது ஆட்சி, உச்சம், மூலத்திரிகோணம், நட்பு, பகை, நீசம், சமம் ஆகிய நிலைகளை கொண்டு அளவிடப்படுகிறது.

இதில் ஆட்சி என்பது கிரகங்களின் சொந்த வீடாக கருதப்படுகிறது. உச்சம் பெறும்போது கிரகங்கள் அதி பலம் பெறுவதாக அமைகிறது. பெரும்பாலன கிரங்கள் தங்களின் ஆட்சி அல்லது உச்ச வீடுகளில்தான் மூலத்திரிகோண வலுவை பெறுகின்றனர்.

உதாரணமாக செவ்வாய் பகவானின் குணாதிசயங்களான, அதிகாரம், ஆணவம், முன்கோபம், அடக்குமுறை, முரட்டுத்தனம், தான் என்கிற அகந்தை, அவசர புத்தி, போராட்டம், வம்பு வழக்கு, சண்டை, அடிதடி, நீதிமன்றம், வழக்கு, நிலம், நிலத்தால் லாபம், ரத்தம் ஆகிய குணங்களை கட்டாயம் வெளிப்படுத்தும் இடமாக மேஷம் இருக்கும். 

சந்திரன் மூலத்திரிகோணம் அடையும் ரிஷபத்தில் எந்த கிரகம் இருந்தாலும், குளுமை, அரவணைப்பு, தாய் அன்பு, அனுசரித்தல், தன்னை சார்ந்தவர்களை ஆதரித்தல், அவர்களால் கஷ்டம் உண்டாதல் உள்ளிட்ட பண்புகளை அந்த இடம் வெளிப்படுத்துவதால், இங்குவரும் கிரங்கள் மேற்கண்ட பண்புகளை பிரதிபலிக்கலாம்.

சிம்மத்தை பொறுத்தவரை, சூரியனின் பண்புகளான அதிகாரம், பதவி, அந்தஸ்து, நேர்வழி, முன்னேறத் துடிப்பது,அனைவரையும் அடக்கி ஆள்வது ஆகிய பண்புகள் சிம்மத்தில் அதிகமாக வெளிப்படும்.

துலாம் ராசியில் சுக்கிரனுக்கு உண்டான காமம், இணைவு, அழகுபடுத்திக்கொள்ளுதல், வசதி வாய்ப்பு, வியாபார தந்திரம், செயல்திறன், ஆதாயம் தேடல் உள்ளிட்ட பண்புகளை வெளிப்படுத்துவதாக அமையும்.

கன்னி ராசியில் புதனின் அறிவு, புத்திசாலித்தனம், சாதூர்யத்தை வெளிப்படுத்தும் இடமாக இருக்கும்.

தனுசு ராசியில் குருவின் குணங்களான மேன்மை, உயர்கல்வி, பொறுப்பு, சமுதாய அந்தஸ்து, நேர்வழி, உயர்பதவி அடைவது, முயற்சி, பெரிய திட்டங்களை திட்டுவது, முன்னுதாரணம் பெறுதல் உள்ளிட்ட பண்புகளை வெளிப்படுத்துவதாக இருக்கும். 

கும்பத்தில் சனி பகவானின் பண்புகளான துன்பம், சோம்பேறித்தனம், விதண்டாவதம், பொறாமை, சூழ்ச்சி, வஞ்சகம், சிரமம், துன்பங்களை சகித்து கொள்ளுதல், சாபம் இடுதல், இறை வழிபாட்டில் முரண் உள்ளிட்ட பண்புகளை வெளிப்படுத்தும் இடமாக இருக்கும்.

மல்லித்தழையில் உள்ள நன்மைகள்