மலையாள நடிகர் மோகன்லால் அர்ஜென்டினா நாட்டின் கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி தனக்கு அளித்த பரிசை வீடியோவாக வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார். ( photo credit : mohanlal instagram)
By Kalyani Pandiyan S Apr 20, 2025
Hindustan Times Tamil
அதில் அவர், ‘ வாழ்க்கையில் சில தருணங்கள் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு ஆழமானவை. (photo credit : messi instagram)
அவை என்றென்றும் உங்களுடன் இருக்கும்.இன்று, அந்த தருணங்களில் ஒன்றை நான் அனுபவித்தேன். (photo credit : messi instagram)
நான் அந்தப் பரிசை மெதுவாகப் பிரித்தபோது, என் இதயம் துடிப்பதை நிறுத்தியது. காரணம், அங்கு ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி கையெழுத்திட்ட ஜெர்சி இருந்தது. ( photo credit : mohanlal instagram)
அதில் என் பெயர், மெஸ்ஸியின் சொந்தக் கையால் எழுதப்பட்டது.
( photo credit : mohanlal instagram)
மெஸ்ஸியை, களத்தில் அவரது திறமைக்காக மட்டுமல்ல, அவரது பணிவு மற்றும் கருணைக்காகவும் நீண்ட காலமாகப் போற்றிய ஒருவருக்கு, இது உண்மையிலேயே சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். ( photo credit : mohanlal instagram)
இந்த நம்பமுடியாத தருணம் இரண்டு அன்பான நண்பர்களின் கருணை இல்லாமல் சாத்தியமாகி இருக்காது. இதனை எனக்கு கிடைக்க உதவிய டாக்டர் ராஜீவ் மங்கோட்டில் மற்றும் ராஜேஷ் பிலிப் ஆகியோருக்கு என் இதயத்தின் அடிப்பகுதியில் இருந்து நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ( photo credit : mohanlal instagram)
எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த மறக்க முடியாத பரிசுக்கு நன்றி, கடவுளே’ என்று பதிவிட்டு இருக்கிறார். ( photo credit : mohanlal instagram)
ஆரோக்கியமான செரிமானத்திற்கு இந்த 9 காலை பழக்கங்களைப் பின்பற்றுங்கள்.