ருசியான புதினா சட்னி.. இப்படி செஞ்சு பாருங்க.. சூடான இட்லிக்கு சரி காம்பினேஷன்!
Canva
By Pandeeswari Gurusamy Mar 13, 2025
Hindustan Times Tamil
பொதுவாக இட்லி என்றாலே சாம்பார், தேங்காய் சட்னி, தக்காளி சட்னிதான் பெரும்பாலும் செய்கிறோம். ஆனால் இப்படி ஒரு புதினா சட்னி செய்து பாருங்க .. வீட்டில் எல்லாரும் எக்ஸ்ட்ரா 2 இட்லி சாப்பிடுவாங்க.
கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய்விட்டு சூடானதும் கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம்பருப்பு சேர்த்து வறுத்துக்கொள்ள வேண்டும். அவை நிறம் மாறி வரும் வரை வறுக்க வேண்டும்.
Pixabay
இவை லேசாக வதங்கியதும், புதினா இலைகள் சேர்த்து வதக்கிக்கொள்ள வேண்டும். பின் புளி சேர்த்து வதக்க வேண்டும்.
பின் மிளகாய் வற்றல் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவேண்டும். பின் பூண்டு பற்கள் மற்றும் இஞ்சி சேர்த்து வதக்கவேண்டும்
Pixabay
பின் வதக்கிய பொருட்களை ஆற விட வேண்டும். மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான உப்புடன் வதக்கியவற்றை அரைத்து பின் அரை கப் தண்ணீர் விட்டு நைசாக அரைத்துக் கொள்ளவேண்டும்.
Pixabay
அரைத்த சட்னியை பாத்திரத்தில் மாற்றி தேவையான அளவு தண்ணீர் விட்டு கலந்து கொள்ளவேண்டும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு உளுந்து, பெருங்காயத்தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் கலந்து கொள்ளவேண்டும்.
Pixabay
தோசை, இட்லி எல்லா நேரமும் சாப்பிட்டு சோர்வடைந்துவிட்டீர்களா? உங்களிடம் தோசை மாவு மீதமிருந்தால், இப்போது நீங்கள் ஒரு சுவையான மற்றும் சத்தான சிற்றுண்டியைச் செய்யலாம்.