’உங்களுக்கு கோடிகளை குவிக்கும் அதிர்ஷ்டம் உள்ளதா?’ 2, 4, 5, 9, 11ஆம் இடங்கள் சொல்லும் ரகசியங்கள்!

By Kathiravan V
Dec 08, 2024

Hindustan Times
Tamil

பொருள் இல்லார்க்கு இவ்வுலகு இல்லை; அருள் இல்லாருக்கு அவ்வுலகு இல்லை என்பது குறள். வாழ்வியலை நடத்தி செல்ல பொருளாதாரம் இன்றியமையாததாக உள்ளது. ஒருவரது ஜாதகத்தில் 2 ஆம் இடமான தனஸ்தானம், 4ஆம் இடமான சுக ஸ்தானம், 5 ஆம் இடமான பூர்வபுண்ணிய ஸ்தானம், 9ஆம் இடமான பாக்கிய ஸ்தானம், 11ஆம் இடமான லாப ஸ்தானம் ஆகிய இடங்கள் பொருளாதாரம், பணவரவு, சொத்து சேர்க்கை, பூர்வீக சொத்துக்கள், வண்டி, வாகனம், வாரிசுகளுக்கான சொத்து சேர்க்கை குறித்து விவரிக்கின்றது. ஒருவருடைய பொருளாதார பலம் இந்த 5 வீடுகளை கொண்டே மதிப்பிடப்படுகின்றது. 

2ஆம் இடம் மூலம் ஜாதகர் சம்பாதிக்கும் வருமானம், தனம், முன்னேற்றம், வசதி வாய்ப்புகள் பற்றி தெரிந்து கொள்ள முடியும். ஒருவரது ஜாதகத்தில் 2ஆம் அதிபதி வலுவுடன் இருந்தாலோ, 2ஆம் இடத்தில் சுபக் கோள்கள் இருந்தாலோ, 2க்கு உடையவர் சுபர்கள் வீட்டில் தங்கினாலோ, 2க்கு உடையவர் ஆட்சி, உச்சம், மூலத்திரிகோணம் அடைந்தாலோ ஜாதகர் நல்ல வருமானங்களை ஈட்டுவார். 

4ஆம் இடம் என்பது அசையும் மற்றும் அசையா சொத்துக்கள், வண்டி வாகனங்கள், பட்டம், பதவி ஆகியவற்றை குறிக்கின்றது. விவசாயன், வண்டி வாகனம், பதவிகள், முதலீடுகள் மூலம் பணம் சம்பாதிப்பது குறித்து இது விவரிக்கின்றது. எனவே 4ஆம் அதிபதி வலுப்பெற்று இருப்பது, 4ஆம் இடத்தில் வலுவான கோள்கள் அமர்ந்து இருப்பது, 4க்கு உடையவர் ஆட்சி, உச்சம், மூலத்திரிகோணம் அடைவது சிறப்புகளை தரும்.

5ஆம் இடம் என்பது பூர்வீக சொத்துக்கள், புத்திரர்கள் பிறந்த பிறகு வாழ்கையில் வளர்ச்சி, சொத்துக்களால் கிடைக்கும் ஆதாயம், தாய் மற்றும் தகப்பன் வழியில் கிடைக்கும் சொத்துக்கள், பங்குச்சந்தை முதலீடு, திடீர் அதிஷ்டம் குறித்து விவரிக்கின்றது.  5ஆம் அதிபதி வலுப்பெற்று இருப்பது, 5ஆம் இடத்தில் வலுவான கோள்கள் அமர்ந்து இருப்பது, 5க்கு உடையவர் ஆட்சி, உச்சம், மூலத்திரிகோணம் அடைவது சிறப்புகளை தரும்.

9ஆம் இடம் என்பது திடீர் அதிஷ்டங்களை கொடுக்கும் தன்மை உடையது. எவ்வளவு பணம் சம்பாதித்து இருந்தாலும், அதன் மூலம் பாக்கியம் பெற 9ஆம் இடம் வலுபெறுவது முக்கியம். குருமார்கள் மற்றும் தகப்பன் வழியில் இருந்து ஆதரவு, அதிஷ்டம், நீண்டதூர பயணம் மூலம் ஆதாயம், முன்னோர்கள் வழி சொத்துக்கள், உயர்கல்வி மூலம் வளர்ச்சி, அறிவுசார் சொத்துரிமை, கண்டிப்பிடிப்பு, சமூக ஊடகம், எழுத்து மூலம் கிடைக்கும் வருமானம், காப்புரிமை மூலம் கிடைக்கும் ஆதாயங்களை 9ஆம் இடம் வெளிக்கொணர்கிறது. 9ஆம் அதிபதி வலுப்பெற்று இருப்பது, 9ஆம் இடத்தில் வலுவான கோள்கள் அமர்ந்து இருப்பது, 9க்கு உடையவர் ஆட்சி, உச்சம், மூலத்திரிகோணம் அடைவது சிறப்புகளை தரும்.

11ஆம் இடமான லாப ஸ்தானம் ஆனது லாப மேன்மை, செயல்களால் கிடைக்கும் ஆதாயம், முதலீடுகள் மற்றும் நிதி நிர்வாகம் மூலம் கிடைக்கும் ஆதாயம், ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகளில் பணம் வருவது ஆகியவற்றை குறிக்கின்றது.  11ஆம் அதிபதி வலுப்பெற்று இருப்பது, 11ஆம் இடத்தில் வலுவான கோள்கள் அமர்ந்து இருப்பது, 11க்கு உடையவர் ஆட்சி, உச்சம், மூலத்திரிகோணம் அடைவது சிறப்புகளை தரும். அதே போல் எந்த கோள் 11ஆம் இடத்தில் இருந்தாலும் ஜாதகருக்கு நற்பலன்களையே தரும். 

இந்த ஐந்து வீடுகளில் குறைந்தபட்சம் 3 வீடுகளில் சுபர்கள் அமர்ந்து இருந்தாலோ அல்லது 3 வீட்டு அதிபதிகள் நட்பு நிலைக்கு குறையாமல் இருந்தாலோ உங்கள் செல்வ நிலை சிறப்பாக இருக்கும். 

Parenting Tips : தேர்வில் முதலிடம்; எப்போதும் சிறப்பிடம்; குழந்தைகளிடம் கூறவேண்டிய பாசிட்டிவ் விஷயங்கள் என்ன?