இன்று இரவுக்குள் 3ஆவது முறையாக நிரம்பும் மேட்டூர் அணை! டாக்டர் ராமதாஸ் கொடுக்கும் ’நச்’ ஐடியா!

By Kathiravan V
Dec 31, 2024

Hindustan Times
Tamil

தமிழ்நாட்டின் மிகப்பெரிய பாசன ஆதாரமாகத் திகழும் மேட்டூர் அணை  இன்று இரவு  நிரம்பும் என்று எதிர்பாக்கப்படுகிறது.

மொத்தம் 120 அடி நீர்மட்டம் கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 119.97 அடியாக உள்ளது. 

மேட்டூர் அணைக்கு வினாடிக்கு  2875 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

மேட்டூர் அணை அதன் முழுக் கொள்ளளவை எட்டிய பிறகு , உபரி நீரை சேலம் மாவட்ட ஏரிகளுக்கு அனுப்பி நிரப்ப வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்து உள்ளார். 

அணை நிரம்பிய பிறகு கூடுதலாக கிடைக்கும் தண்ணீரை ஏரிகளுக்கு அனுப்புவது தான் பயனுள்ளதாக இருக்கும். இந்தத் திட்டத்தால் யாருக்கும், எந்த பாதிப்பும் ஏற்படாது. இத்திட்டத்தின்படி மொத்தமுள்ள 100 ஏரிகளையும் நிரப்ப வேண்டும் என்றால் கூட, 0.555 டி.எம்.சி தண்ணீர்தான் தேவைப்படும் என மருத்துவர் ராமதாஸ் கூறி உள்ளார். 

அணைக்கு வினாடிக்கு 2875 கன அடி தண்ணீர் வரும் நிலையில், அதில் 2000 கன அடி நீரை 2 நாட்களுக்கு திறந்து விட்டாலே இப்போது இணைக்கப்பட்டுள்ள ஏரிகள் நிரம்பி விடும் என அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறி உள்ளார். 

மலச்சிக்கல் நீங்க 8 வழிகள்

Image Credits : pexels